Instagram யில் நீங்க நீண்ட நாட்களா எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த கமன்ட் எடிட் அம்சம் வந்தாச்சு எப்படி செய்வது?
Instagram தனது கஸ்டமர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த புதிய அம்சம், பயனர்கள் தங்கள் கமன்ட்களை எடிட் செய்யும் ஆப்சன் வழங்குகிறது
இந்த அம்சத்தை எவ்வாறு இன்ஸ்டால் செய்வது மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம்.
Instagram தனது கஸ்டமர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம், பயனர்கள் தங்கள் கமன்ட்களை எடிட் செய்யும் ஆப்சன் வழங்குகிறது. அதாவது, நீங்கள் ஒரு போஸ்ட்டில் கமன்ட் செய்யும்போதே அதைத் திருத்த விரும்பினாலோ அல்லது எழுத்துப் பிழையைச் சரிசெய்ய விரும்பினாலோ, இப்போது அது சாத்தியமாகும். இதற்கு முன்பு, இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு இந்த விருப்பத்தை வழங்கவில்லை. இந்த அம்சத்தை எவ்வாறு இன்ஸ்டால் செய்வது மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம்.
SurveyInstagram எடிட் அம்சத்தை எவ்வளவு நேரத்திற்குள் செய்ய வேண்டும்?
இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்காக மிகவும் பயனுள்ள ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம், ஒரு பதிவில் கருத்து தெரிவிக்கும்போது ஏற்படும் தவறுகளைத் திருத்திக்கொள்ள பயனர்களை அனுமதிக்கிறது. அதாவது இது கிட்டத்தட்ட WhatsApp போல வேலை செய்யும் இருப்பினும், அவ்வாறு செய்வதற்குப் பயனர்களுக்கு 15 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்படும். 15 நிமிடங்கள் கடந்த பிறகு, அந்தக் காமண்டை எடிட் செய்யும் வசதி இல்லாமல் போய்விடும். சுவாரஸ்யமாக, அந்த 15 நிமிடத்திற்குள் நீங்கள் விரும்பும் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்திக்கொள்ளலாம்.
இன்ஸ்டாகிராமின் இந்த சமீபத்திய அம்சம், டெக்ஸ்ட் மட்டும் திருத்த உங்களை அனுமதிக்கிறது. அதாவது, உங்கள் கமண்டில் நீங்கள் ஒரு போட்டோ அல்லது GIF போன்ற பிற ஊடகத்தைச் சேர்த்திருந்தால், அது திருத்தப்படாது. மேலும், நிறுவனம் திருத்தப்பட்ட கருத்துகளில் “திருத்து” (Edit) என்ற குறியீட்டைப் பயன்படுத்தும், இது கருத்து திருத்தப்பட்டுவிட்டது என்பதை மற்ற பயனர்களுக்குத் தெரியப்படுத்தும். இருப்பினும், முந்தைய காமன்ட்களின் ஹிஸ்டரி தெரியாது. பயனர்கள் புதிதாகத் எடிட் செய்யப்பட்ட கமன்ட் மட்டுமே காண்பார்கள். இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த அம்சத்திற்காக நீண்ட காலமாக காத்திருந்தனர். இது போன்ற பெரும்பாலான தளங்கள் டெக்ஸ்ட் எடிட் வசதியை வழங்குகின்றன. இப்போது, அது இறுதியாக இன்ஸ்டாகிராமிலும் கிடைக்கிறது.
இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது
- எடிட் செய்வதற்க்கு , நீங்கள் கமன்ட் தெரிவித்த இன்ஸ்டாகிராம் போச்ட்டிர்க்கு செல்லவும்.
- கமன்ட் பிரிவில், நீங்கள் திருத்த விரும்பும் கமண்டை கண்டறியவும்.
- கமன்ட் பாக்ஸ் தட்டவும் அல்லது நீண்ட நேரம் அழுத்திப் பிடிக்கவும்.
- இப்போது தோன்றும் மெனுவையோ அல்லது கம்னட்க்கு கீழே உள்ள ‘Edit’ பட்டனை தட்டவும் .
- நீங்கள் விரும்பும் மாற்றங்களை இங்கே செய்துகொள்ளுங்கள்.
- எடிட் செய்த பிறகு, ‘முடிந்தது’ என்பதை அல்லது சரிக்குறியை அழுத்துவதன் மூலம் மாற்றங்களைச் சேமிக்கவும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile