RBI யின் அதிரடி ரூ,10,000க்கும் அதிகம் பணம் செலுத்துவோருக்கு ஒரு மணி நேரம் ப்ரேக்

HIGHLIGHTS

10,000க்கும் அதிகமான தொகையை அனுப்ப வேண்டும் என்றால், அது ஒரு மணி நேரத்துக்கு செய்ய முடியாது

இந்த நடவடிக்கை ஆன்லைன் மோசடியை கட்டுபடுத்த எடுக்கப்பட்டது.

ந்தப் ட்ரேன்ஸ்செக்சனை கேன்ஸில் செய்யலாம்.

RBI யின் அதிரடி ரூ,10,000க்கும் அதிகம் பணம் செலுத்துவோருக்கு ஒரு மணி நேரம் ப்ரேக்

ரிஸ்ர்வ் பேங்க் இந்தியா (RBI) தனது கட்டண டிஜிட்டல் பேமன்ட் அதாவது UPI மற்றும் IMPS மூலம் 10,000க்கும் அதிகமான தொகையை அனுப்ப வேண்டும் என்றால், அது ஒரு மணி நேரத்துக்கு செய்ய முடியாது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்க காரணம் தொடர்ந்து தொடர்ந்து அதிகம் நடைபெறும் ஆன்லைன் மோசடியை கட்டுபடுத்த எடுக்கப்பட்டது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய திட்டத்தின் கீழ், ரூ10,000-க்கு அதிகமான தொகையை டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு (UPI அல்லது IMPS) ஒரு மணி நேரம் வரை வேயிட்டிங் காலம் விதிக்கப்படலாம். இந்த முன்மொழிவு குறித்து மே 8, 2026 வரை கருத்துக்களை இந்திய ரிசர்வ் பேங்க் கோரியுள்ளது. அதன் பிறகு இறுதி வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்.

இந்த நடவடிக்கை எடுக்க காரணம் என்ன

அதாவது தற்பொழுது தொடர்ந்து சைபர் மோசடியால் ஏற்படும் இழப்புகள் 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ,22,000 கோடியைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்திய ரிசர்வ் பேங்க் ஒரு ‘குளிரூட்டும் காலத்தை’ (cooling-off period) என அறிவித்து வருகிறது. இது பணப் ட்ரேன்ஸ்செக்ஷன் ஒரு மணி நேரத்திற்கு முடக்கும், அதாவது யாருக்குப் பணம் அனுப்பப்படுகிறதோ, அவர் ஒரு மணி நேரத்திற்கு அதைப் பெறமாட்டார்.

இந்தக் காலகட்டத்தில், பணம் யாருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை அனுப்புபவர் அறிந்துகொள்வார். பணப் பரிமாற்றம் மோசடியானது எனில், அந்தப் ட்ரேன்ஸ்செக்சனை கேன்ஸில் செய்யலாம். ₹10,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் மொத்த மோசடியில் 45% ஆக இருந்தாலும், அவை மொத்த மோசடி மதிப்பில் 98.5% ஆக உள்ளன அதாவது இதன் மூலம் 95 சதவிகிதம் குறைக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க இனி குழந்தைகளுக்கு கை செலவுக்கு உதவ தனி பேங்க் அக்கவுன்ட் தேவை இல்லை, GPay pocket money அம்சம் எப்படி செட் செய்வது?

இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இன்று நடக்கும் பெரும்பாலான மோசடிகள் தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படுவதில்லை, மாறாக (பணம் அனுப்புமாறு மிரட்டுவது அல்லது தூண்டுவது போன்ற) சோசியல் மீடியா மூலமே நிகழ்கின்றன. மோசடிக்காரர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் மீது உளவியல் ரீதியான அழுத்தத்தைப் பிரயோகிப்பதோடு, சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரம் கொடுப்பதில்லை. ஒரு மணி நேரத் தாமதம், பாதிக்கப்பட்டவர்கள் சிந்தித்து அந்தப் பரிவர்த்தனையை கேன்ஸில் செய்வதற்கு அவகாசம் அளிக்கும் இதன் மூலம் மோசடி மிக அதிகளவில் குறையும்

இதில் ஒரு சில பேருக்கு தள்ளுபடி

  • அதாவது இது தங்களின் சொந்த தனிப்பட்டவர்களுக்குள் பணம் அனுப்புவோர்களாக இருந்தால், உதாரணமாக பிஸ்னஸ் அக்கவுன்ட் மற்றும் அந்த அக்கவுட்க்கு உரிமையாளர் அல்லது பர்டர்ஷிப்க்குள் பணம் அனுப்புவதாக இருந்தால் அவர்களுக்கு எந்த நிபந்தனையும் இருக்காது.
  • இந்த விதி பிஸ்னஸ் கொடுக்கல், வாங்கல் (கடைகளில் செய்யப்படும் கொடுப்பனவுகள்), ரேக்கரிங் பேமன்ட் , செக்களுக்கு மற்றும் NACH பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தாது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo