6000mAh பேட்டரியுடன் Lava அதன் புதிய போன் அறிமுகம், இதன் விலை அம்சங்கள் பாருங்க

6000mAh பேட்டரியுடன் Lava அதன் புதிய போன் அறிமுகம், இதன் விலை அம்சங்கள் பாருங்க

Lava இந்தியாவில் அதன் புதிய Lava Shark 2 5G போனை இன்று அறிமுகம் செய்தது, இந்த போன் ஷார்க் சீரிஸில் புதிதாகச் சேர்க்கப்பட்ட மாடலாகும். சுவாரஸ்யமாக, இதன் 4ஜி பதிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்டது, ஆனால் இந்த புதிய 5ஜி மாடல் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள மிக முக்கியமான மாற்றம், இதன் சக்திவாய்ந்த 6000mAh பேட்டரி ஆகும். மேலும் இந்த போனில் இருக்கும் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Lava Shark 2 5G விலை தகவல்

இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ,11,999 ஆகும். இதில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட ஒரே ஒரு வேரியன்ட் மட்டுமே கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 10 ஆம் தேதி முதல் ஆஃப்லைன் ரீடைலர் விற்பனைக் கடைகளில் விற்பனைக்கு வரும். கலர் விருப்பங்களைப் பொறுத்தவரை, லாவா ஷார்க் 2 5G, ஆர்யா ப்ளூ மற்றும் சோனார் கோல்ட் ஆகிய இரண்டு கவர்ச்சிகரமான கலர்களில் வருகிறது.

Lava Shark 2 5G அம்சங்கள்

இதன் அம்சங்களில் முக்கியமாக டிஸ்ப்ளே பற்றி பேசினால், இதில் இதில் 6.75 இன்ச் HD+ LCD ஸ்க்ரீன் உள்ளது, இது 120Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது.இந்த போன் இரட்டை சிம் சப்போர்டுடன் வருகிறது, மேலும் இதில் ஆண்ட்ராய்டு 16-இன் வெண்ணிலா வெர்சன் உள்ளது. இதில் ‘‘bloatware-free மற்றும் ad-free’ அனுபவத்தைப் வழங்குகிறது என்று அந்நிறுவனம் கூறுகிறது.

இதையும் படிங்க:சத்தமில்லாமல் Oppo புதிய போனை அறிமுகம் செய்தது 7000mAh பேட்டரி கொண்டிருக்கும்

பர்போம்ன்சுக்காக, இது 6nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட யூனிசாக் T8200 ஆக்டா-கோர் ப்ரோசெசர் இயக்கப்படுகிறது. மேலும், இதில் 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, இதை 4GB வரையிலான விர்ச்சுவல் ரேம் மூலம் கூடுதலாக அதிகரிக்கலாம்.அப்டேட்களை பற்றி பேசுகையில், உங்களுக்கு 1 வருட OS அப்டேட் 2 வருட செக்யூரிட்டி அப்தேட்களும் கிடைக்கும்.

இதன் பின்புறத்தில் 13MP கொண்ட ஒற்றை AI கேமராவும், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 5MP முன்புற கேமராவும் உள்ளது.

இதில் 6,000mAh பவர் கொண்ட ஒரு பெரிய பேட்டரி உள்ளது. இந்த பேட்டரியால், தொடர்ச்சியாக 13 மணி 35 நிமிடங்கள் வரை யூடியூப் வீடியோக்களைப் பார்க்க முடியும் அல்லது 12 மணி 23 நிமிடங்கள் வரை ஸ்க்ரீனை இயக்கி வைத்திருக்க முடியும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. மேலும், இந்த போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது .

மேலும், இந்த ஃபோன் IP64 ரேட்டிங்கை கொண்டிருப்பதாகவும், அதாவது இது டஸ்ட் மற்றும் லேசான வாட்டர் ரெசிஸ்டன்ட் ஓரளவிற்கு எதிர்க்கும் திறன் கொண்டது என்றும் அந்நிறுவனம் கூறுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile