சிறிய கடை நடத்தி வரும் மக்களே உஷார் UPI மூலம் பணம் செலுத்துவோர் உங்களை இப்படியும் ஏமாத்தலாம்.

சிறிய கடை நடத்தி வரும் மக்களே உஷார் UPI மூலம் பணம் செலுத்துவோர் உங்களை இப்படியும் ஏமாத்தலாம்.
HIGHLIGHTS

இன்றைய உலகம் முழுமையாக டிஜிட்டல் மையமாக மாறியுள்ளது

ஒருவேளை நீங்கள் கடை வைத்திருக்கும் வணிகர் என்றால் நிச்சயம் உங்களிடம் யூபிஐ ஸ்கேனிங் இருக்கும்

உங்கள் ஸ்கேனிங் அட்டையை அல்லது ஸ்டிக்கரை கடைக்குள்தான் வைக்க வேண்டும்

இன்றைய உலகம் முழுமையாக டிஜிட்டல் மையமாக மாறியுள்ளது.பணம் இல்லாத டிஜிட்டல் பரிமாற்றம் என்பது இன்றைக்கு மக்களிடம் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. வங்கிகளின் வாசலிலும், ஏடிஎம் வாசல்களிலும் கால்கடுக்க நிற்காமல் நொடியில் நம்முடைய பணத்தை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் சிறந்த வழியாக உள்ளது டிஜிட்டல் பண பரிவர்த்தனை. கூகுள் பே,போன் பே, என யுபிஐ பரிமாற்றத்தின் மூலம் பணத்தை எளிதில் அனுப்பக்கூடிய வசதியை நாம் பெற்றிருக்கிறோம். யூபிஐ என்பது வங்கி கணக்குகளுக்கான பண பரிமாற்றம் மட்டுமே அல்ல. சிங்கிள் டீ வடை என்றாலுமே உடனே ஸ்கேன் செய்து பணத்தை கொடுக்கும் அளவுக்கு மாறிவிட்டது. 

ஒருவேளை நீங்கள் கடை வைத்திருக்கும் வணிகர் என்றால் நிச்சயம் உங்களிடம் யூபிஐ ஸ்கேனிங் இருக்கும். அப்படியானால் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை நாங்கள் சொல்கிறோம்

தள்ளுவண்டி கடை முதல் மிகப்பெரிய உணவகங்கள் வரை யூபிஐ ஸ்கேன் முறை வந்துவிட்டது. ஆனால் இந்த மாதிரியான ஸ்கேனிங் முறையில் பல தில்லுமுல்லு நடப்பதாக காவல்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது. குறிப்பாக தங்கள் கடைகளில் யூபிஐ ஸ்கேனிங் முறையை வைத்திருக்கும் வணிகர்கள் மிகக்கவனமாக இருக்க வேண்டுமென்றும், எப்படியெல்லாம் மோசடி நடக்கிறது என்ற எச்சரிக்கையையும் கொடுத்துள்ளது

உங்கள் ஸ்கேனிங் அட்டையை அல்லது ஸ்டிக்கரை கடைக்குள்தான் வைக்க வேண்டும். சிலர் கடைக்கு வெளியேவும் ஸ்கேனிங் ஸ்டிக்கரை ஒட்டி வைத்திருப்பார்கள். மோசடிக்காரர்கள் இரவோடு இரவாக அந்த ஸ்டிக்கரை மாற்றி ஒட்டி பணத்தை தங்கள் வங்கிக்கணக்குக்கு எடுத்துச் செல்கின்றனர்

பணம் அனுப்பிட்டேன் என வாடிக்கையாளர் செல்போனை காட்டினால் நீங்களும் அவசரமாக பார்ப்பீர்கள். அதில் உங்கள் கடை பெயருடன் கூடிய பணமும் அனுப்பப்பட்டது என காண்பிக்கும். ஆனால் இப்படி போலியான பல செயலிகள் இணையத்தில் உள்ளன. அந்த செயலி மூலம் உங்கள் கடை ஸ்கேனிங்கை ஸ்கேன் செய்தால் பணம் அனுப்பியவாறே தொகையை காட்டும். மேலோட்டமாக பார்த்துவிட்டு நீங்களும் நம்புவீர்கள். அதனால் அதிலும் இருக்கு சிக்கல். கவனம் தேவை.

இப்படியான மோசடியை தவிர்க்க ஒரே வழி யூபிஐ ஸ்பீக்கர்ஸ். உங்கள் கடைகளில் வெறும் ஸ்கேனிங் மட்டுமே வைத்திருக்காமல், பணம் பெற்றதும் ஒலி வடிவில் உடனடியாக உங்களுக்கு தெரியப்படுத்தும் யூபிஐ ஸ்பீக்கர்களையும் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இது மட்டுமே உங்களை மோசடியில் இருந்து காப்பாற்றும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo