LinkedIn-ல் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி அறிமுகம், அது எப்படி செய்வது?

LinkedIn-ல் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் வசதி அறிமுகம், அது  எப்படி செய்வது?
HIGHLIGHTS

இந்தப் புதிய அம்சம், ஆண்டிராய்ட் மற்றும் IOS போன்களின் ஆப்களில் கிடைக்கும்

அதன் வெப்சைட்டில்  மெசேஜ் அனுப்புவதை எளிமையாக்கிய சில தினங்களிலேயே அடுத்த அதிரடியாக தனது மொபைல் ஆப்களின் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் புதிய வசதியை அறிமுகம் செய்கிறது லிங்க்டு-இன். இதற்கான அறிவிப்பும் தற்போது வெளியிட்டுள்ளது. இதனால் பயனர்கள் தங்கள் தொழில் சார்ந்த விஷயங்களுக்கு எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.

https://static.digit.in/default/1c28a465b3fba15cd8001e1b2c423d40f84d826e.jpeg

இதன் ஆரம்பமாக  இந்த வசதி ஆண்டிராய்ட், IOS ஃபோன்களில் உள்ள ஆப்களில் அறிமுகமாகிறது. சென்ற வாரம் அறிமுகமான அப்டேட்டில், மெசேஜ் பாக்ஸினை தேவைப்பட்ட அளவுக்கு இழுத்துக் கொள்வது, பைல்கள் அனுப்பும் அட்டாச்மென்ட் வசதிக்குத் தனி ஐகான், பயனர்களுக்கு (@)மென்சனைக் குறிப்பது ஆகிய புதிய அம்சங்களை லிங்க்டு-இன் அறிமுகம் செய்திருந்தது. 

வொய்ஸ் மெசேஜ் அனுப்புவது  ஏற்கனவே வாட்சப், வீ-சாட் போன்ற செயலிகளில் பிரபலாக இருந்து வருகிறது. லிங்க்டு-இன்னில் வொய்ஸ் பதிவுகளை அனுப்பும் வசதியின் மூலம் பயனர்கள் தங்கள் தொழில் சார்ந்த நட்புகளுடன் இன்னும் சிறப்பான, மற்றும் நெருக்கமான சப்போர்ட் பெற முடியும்  முடியும் என்று இந்நிறுவனம் கருதுகிறது. மேலும் கால் செய்வதைவிட வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது புது அனுபவத்தைத் தரும் என்றும் அந்நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இது ஒருபுறம் இருந்தாலும், இந்த வசதியால் தேவையற்ற ஆஃபர்கள், விளம்பரங்கள் அனைத்தும் ஸ்பாம்களாக வரும் எனவும் சிலர் அச்சம் தெரிவிக்கின்றனர். 

வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது எப்படி? 

கீபேடில் உள்ள மைக் ஐகானை அழுத்திப் பிடித்து நமது செய்தியைப் பதிவு செய்யலாம், பதிவுசெய்து முடித்தவுடன் ரிலீஸ் செய்தால் செய்தி அனுப்பப் பட்டு விடும்.  கிட்டத்தட்ட  வாட்ஸ்அப் வொய்ஸ்  மெசேஜ் போல தன்  கேன்சல் செய்ய மைக் ஐகானை அழுத்திப்பிடித்தவாறு கீழே இழுக்க வேண்டும்.அப்படி சென்றால் கேன்சல் ஆகிவிடும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo