ஆண்ட்ராய்டு Q பீட்டா என்றால் என்ன அதை எப்படி இன்ஸ்டால் செய்வது?

ஆண்ட்ராய்டு Q பீட்டா  என்றால்  என்ன அதை எப்படி இன்ஸ்டால் செய்வது?

ஆண்ட்ராய்டு Q இயங்குதளத்துக்கான முதல் பீட்டா பதிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் இரண்டாவது பீட்டா ஏப்ரல் மாதத்திலும் வெளியானது.கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு Q இயங்குதளத்தின் மூன்றாவது பீட்டா பதிப்பை வெளியிட்டது. இதனை அந்நிறுவனம் சமீபத்தில் நடந்து முடிந்த கூகுள் I/O 2019 நிகழ்வில் அறிவித்தது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய பீட்டா வெர்ஷன் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி கூகுள் அல்லாத 15 ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ பீட்டா வழங்கப்படுகிறது. இதில் ஒப்போ, சியோமி, ரியல்மி, ஒன்பிளஸ், நோக்கியா மற்றும் பல்வேறு இதர பிராண்டுகள் இருக்கின்றன.

ஆண்ட்ராய்டு Q பீட்டா டவுன்லோடு செய்யும் முன் இது சீரான இயங்குதளம் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதுபோன்ற பீட்டா இயங்குதளங்களில் பிரச்சனைகள் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் பீட்டா இயங்குதளத்தை நீங்கள் பயன்படுத்தும் முக்கிய மொபைல் போனில் இன்ஸ்டால் செய்வது சரியான முடிவாக இருக்காது. 

எதுவானாலும் இன்ஸ்டால் செய்ய முடிவு செய்ய விரும்பினால், தங்களது ஸ்மார்ட்போனை முழுமையாக பேக்கப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது பீட்டா இயங்குதளத்தால் மொபைல் போன் டேட்டாவுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். 

ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு Q பீட்டா 3 இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்ய விரும்பினால் அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். 

ஆண்ட்ராய்டு Q பிராண்டுகள்

– முதலில் பீட்டா திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதனால் உங்களது கூகுள் அக்கவுண்ட்டில் சைன்-இன் செய்ய வேண்டும். இதற்கு https://www.google.com/android/beta வலைதளம் செல்ல வேண்டும். இங்கு எந்தெந்த சாதனங்களில் இந்த இயங்குதளம் இயங்கும் என்பதை பார்க்க முடியும். 

– எந்த வெப்சைட் சென்றதும், ஸ்மார்ட்போனை திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

– இனி என்ரோல் (Enroll) ஆப்ஷனை க்ளிக் செய்ததும், பதிவு செய்த ஸ்மார்ட்போனிற்கு சிஸ்டம் அப்டேட் தயார் என்பதை குறிக்கும் நோட்டிஃபிகேஷன் திரையில் தோன்றும். 

– இத்துடன் அதனை இன்ஸ்டால் செய்யக் கோரும் ஆப்ஷனும் தோன்றும். இந்த வழிமுறையின் போது ஸ்மார்ட்போன் தானாக ரீஸ்டார்ட் ஆகும். பின் ஸ்மார்ட்போனில் புதிய ஆண்ட்ராய்டு கியூ பீட்டா 3 இயங்குதளம் இன்ஸ்டால் ஆகியிருக்கும். 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo