கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள்  புதிய  ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது. 

இதுவரை ஆண்ட்ராய்டு Q என அழைக்கப்பட்ட புதிய இயங்குதளம் இனி ஆண்ட்ராய்டு 10 என அழைக்கப்பட இருக்கிறது. புதிய இயங்குதளம் முன்பை போன்று இனிப்பு வகைகளின் பெயர்களை கொண்டிருக்காது. இதற்கு மாற்றாக எண் அடிப்படையில் அழைக்கப்படும்.

நீண்ட காலமாக கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு இனிப்பு வகைகளின் பெயர்களை சூட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தது. இந்நிலையில், பழைய வழக்கத்தை மாற்றி புதிய இயங்குதளத்தை ஆண்ட்ராய்டு 10 என அழைப்பதாக தெரிவித்து இருக்கிறது.

ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கு ஏற்கனவே சூட்டப்பட்ட பெயர்களில் சில பெயர்கள் அனைவருக்கும் புரியும் வகையில் இல்லை. இதன் காரணமாகவே பெயர் சூட்டுவதில் மாற்றம் செய்யப்படுகிறது. ஆண்ட்ராய்டு லோகோ மற்றும் நிறம் முன்னதாக 2014 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. அதன் பின் தற்சமயம் கூகுள் பெயர், லோகோ உள்ளிட்டவற்றை மாற்றியிருக்கிறது. 

புதிய லோகோவின் வடிவமைப்பு ஆண்ட்ராய்டு ரோபோட்டை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வரும் வாரங்களில் வெளியிடப்படுகிறது./Google-

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo