Flipkart and Netflix
Flipkart நீங்கள் வெறும் ஆனலைன் ஷாப்பிங் மட்டுமல்லாமல் Netflixயின் சப்ஸ்க்ரிப்ஷன் அதிக காசு கொடுத்து வாங்கி கொடுத்து வாங்குபவர்களாக இருந்தால், இது உங்களுக்கு இது மிகவும் நல்ல செய்தியாக இருக்கும், அதாவது Flipkaart இப்பொழுது அதன் Plus கஸ்டமர்களுக்கு புதிய ரிவார்ட் ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் இப்போது ஒவ்வொரு மாதமும் இலவச ‘Netflix Mobile Plan’-ஐப் பெறலாம். இதற்காகத் தனிச் சந்தாவையோ அல்லது ரீசார்ஜையோ மேற்கொள்ள வேண்டியதில்லை. இந்நிறுவனம் Netflix-உடன் இணைந்து இச்சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியானது பிளிப்கார்டில் கஸ்டமர்களுக்கு ஷாப்பிங் செய்வோருக்கு மட்டுமே கிடைக்கும் முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க.
இந்தச் ஆபர் Flipkart Plus மெம்பர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இலவச Netflix Mobile Plan-ஐப் பெற, பயனர் ஒரு காலண்டர் மாதத்திற்குள் ₹299 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள, தகுதியுடைய குறைந்தது நான்கு ஆர்டர்களை மேற்கொள்ள வேண்டும்.
இந்த ஆர்டர் Flipkart, Flipkart Grocery அல்லது Flipkart Minutes யில் செல்லலாம். தகுதியுள்ள நான்காவது ஆர்டர் (order) பூர்த்தியானதும், பயனர் ஃபிளிப்கார்ட் (Flipkart) ஆப் மூலம் 30 நாள் நெட்ஃப்ளிக்ஸ் மொபைல் பிளானை (Netflix Mobile Plan) கூடுதல் கட்டணமின்றி செயல்படுத்திக்கொள்ள முடியும்.
இந்தத் திட்டம் ஆகஸ்ட் 1 முதல் ஃபிளிப்கார்ட் மெம்பர்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் ஒரு காலண்டர் மாதத்திற்குள் ஃபிளிப்கார்ட், ஃபிளிப்கார்ட் க்ரோசரி அல்லது ஃபிளிப்கார்ட் மினிட்ஸ் ஆகியவற்றில் குறைந்தபட்சம் ₹299 மதிப்புள்ள நான்கு தகுதிவாய்ந்த ஆர்டர்களை முடிக்க வேண்டும். நான்காவது தகுதிவாய்ந்த ஆர்டரைச் செய்த பிறகு, பயனர்கள் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஃபிளிப்கார்ட் செயலி மூலமாக நேரடியாக 30-நாள் நெட்ஃபிலிக்ஸ் மொபைல் திட்டத்தைச் செயல்படுத்தலாம்.
இதன் பொருள், ஃபிளிப்கார்ட் தளத்தில் வழக்கமாக ஷாப்பிங் செய்யும் கஸ்டமர்களுக்கு இந்தச் சலுகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள் இன்னும் ஃபிளிப்கார்ட் பிளஸ் மெம்பராக இல்லாவிட்டாலும், இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கடந்த 12 மாதங்களில் 15 ஆர்டர்களை முடித்த கஸ்டமர்கள் , எந்தவொரு கூடுதல் சந்தாக் கட்டணமும் இன்றி ஃபிளிப்கார்ட் பிளஸ் திட்டத்தில் சேரலாம். அதன் பிறகு, அவர்கள் இந்த புதிய நெட்ஃபிளிக்ஸ் சலுகை மற்றும் பிற பிளஸ் பலன்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதையும் படிங்க:வாரி வழங்கும் வள்ளல் Jio அம்பானி பெரிய மனுஷன் தான் வெறும் ரூ,55 யில்1000-க்கும் மேலான live TV சேனல்
பிளிப்கார்ட் உடன் , இந்தியாவில் நெட்ஃபிலிக்ஸின் உடன் பார்ட்னர்ஷிப் ஆகும் முதல் இ-காமர்ஸ் தளம் ஆகும். இந்த முயற்சி, கஸ்டமர்களுக்கு வழக்கமான ஷாப்பிங்குடன் கூடுதல் என்டர்டைன்மென்ட் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தகுதியுள்ள கஸ்டமர்கள் , தனியான நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்க்ரிப்ஷன் தேவையின்றி, நெட்ஃபிளிக்ஸ் மொபைல் திட்டத்தின் மூலம் இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், வெப்சீரிஸ் மற்றும் பிற கன்டென்ட் கண்டு மகிழலாம்.