FASTag யில் புதிய விதி மாற்றம் ஒரு சிறிய தவறு பெரிய சிக்கலில் முடியலாம் இதை கவனிங்க

FASTag யில் புதிய விதி மாற்றம் ஒரு சிறிய தவறு பெரிய சிக்கலில் முடியலாம் இதை கவனிங்க

டோல் கலெக்ஷன் சிஸ்டம் தற்போது மாற்றப்பட்டு வருகிறது. பிப்ரவரி 17, 2025 முதல் அமலுக்கு வரும் புதிய FASTag விதிகளை NPCI அமல்படுத்த உள்ளது. FASTag-யில் தொகையை சரிபார்ப்பது தொடர்பான இரண்டு மாற்றங்களுடன், நேஷனல்பேமன்ட் கார்பரேசன் ஆப் இந்தியா (NPCI) சுங்கச்சாவடி மேலாண்மைக்கான வழிகாட்டுதல்களை அப்டேட் செய்துள்ளது. அபராதங்களைத் தவிர்க்கவும், சுங்கச்சாவடிகளில் சிறப்பாகப் பயணிக்கவும் இந்த மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

FASTag விதியில் மாற்றம்

சுங்கச்சாவடிக்கு வருவதற்கு முன்பு 60 நிமிடங்களுக்கும் மேலாக குறைந்த பேலன்ஸ் இருப்பதாக பட்டியலிடப்பட்ட, ஹாட்லைனில் உள்ள, அல்லது ப்ளாக் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்ட எந்தவொரு வாகனத்திற்கும் ட்ரேன்செக்சன் சிஸ்டம் பாஸ் வழங்க மறுக்கும்.

RTO-வின் கூற்றுப்படி, குறைந்த பேலன்ஸ் , KYC நிலுவையில் உள்ளதா அல்லது சேசிஸ் எண்ணுக்கும் வாகனப் பதிவுக்கும் இடையில் பொருந்தாததாலோ ப்ளாக் லிஸ்ட்டிங் ஏற்படலாம். மேலும், சுங்கச்சாவடியில் ஸ்கேன் செய்த 10 நிமிடங்களுக்குப் பிறகு FASTag ஸ்டேட்டஸ் செயலற்றதாகிவிட்டால், ட்ரேன்செக்சன் நிராகரிக்கப்படும். எந்தவொரு FASTag-க்கும் இந்த நிபந்தனைகள் அனைத்தும் ஏற்பட்டால், கம்ப்யூட்டர் பிழைக் கோட் 176 உடன் பரிவர்த்தனையை ரிஜக்ட் செய்யும். அரசாங்க விதிகளின்படி, வாகனத்திலிருந்து இரட்டை சுங்க கட்டணம் வசூலிக்கப்படும்.

FASTag ப்ளாக்லிஸ்டிங் என்றால் என்ன ?

பிளாக்லிஸ்ட் செய்யப்பட்ட அல்லது ஹாட்லிஸ்ட் செய்யப்பட்ட FASTag என்பது குறிச்சொல் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்:

  • போதுமான பேலன்ஸ் இல்லாமல் இருப்பது
  • KYC எக்ச்ச்பயர் ஆகி இருப்பது
  • வாகனம் தொடர்பான தீர்க்க முடியாத சட்ட சிக்கல்கள்

FASTag ஸ்டேட்டஸ் எப்படி செக் செய்வது?

பயணம் செய்வதற்கு முன், உங்கள் ஃபாஸ்டேக் செயலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இதை இப்படிச் சரிபார்க்கலாம்:

  • FASTag கஸ்டமர் போர்டல்: NPCI யின் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் (https://www.npci.org.in/what-we-do/netc-fastag/check-your-netc-fastag-status) லோகின்செய்வதன் மூலம் உங்கள் டேக் செயலில் உள்ளதா, செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதா அல்லது தடுக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்.
  • SMS எச்சரிக்கை: உங்கள் பேலன்ஸ் குறைவாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருந்தால், உங்கள் வழங்குநரிடமிருந்து ஒரு SMS நோட்டிபிகேசன் பெறுவீர்கள்.

ப்ளாக்லிஸ்டிங் Fastag அன்லாக் எப்படி செய்வது?

உங்கள் FASTag கருப்பு பட்டியலில் இருந்தால், இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  • குறைந்தபட்ச தேவையான பெலான்சுடன் உங்கள் அக்கவுண்டை ரீசார்ஜ் செய்யுங்கள்.
  • கட்டணத்தைச் சரிபார்த்து, அப்டேட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ் சரிபார்க்கவும்.
  • ரீசார்ஜை கம்ப்யூட்டர் அங்கீகரிக்க சில நிமிடங்கள் ஆகலாம் என்பதால், டேக் செயல்படும் வரை காத்திருங்கள்.
  • இந்த மாற்றங்களுடன், உங்கள் FASTag-ஐ செயலில் வைத்திருப்பது மற்றும் எல்லா நேரங்களிலும் போதுமான பேலன்ஸ் வைத்திருப்பது இன்னும் முக்கியமானதாகிவிட்டது. உங்கள் பயணத்தின் போது சுங்கச்சாவடி கட்டணம் தொடர்பான எந்த தொந்தரவுகளையும் அபராதங்களையும் தவிர்க்க, இந்த விஷயங்களை முன்கூட்டியே கவனித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:Vivo V50 யின் அறிமுகம் தகவல் வெளியானது, விலை தகவல் லீக்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo