ஸ்கேமர்ஸ் நடுங்குவாங்க, Google கொண்டு வருகிறது புதிய அம்சம் உண்யான வொயிஸ் மற்றும் போலி வொயிஸ் கண்டுபிடிக்கலாம்
சற்று கற்பனை செய்து பாருங்கள், உங்கள் குடும்பத்தினரிடமிருந்தோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரிடமிருந்தோ உங்களுக்கு கால் வருகிறது. ஸ்க்ரீனில் அவர்களின் பெயரும் நம்பரும் தோன்றும், பேசுபவரும் அவர்களுடைய வொயிஸ் போலவே இருக்கும். அவர்கள் பதற்றத்துடன் தங்களுக்கு உடனடியாகப் பணம் தேவை என்று கூற, நீங்களும் யோசிக்காமல் அந்தப் பணத்தை அனுப்புகிறீர்கள். ஆனால், காலர் உங்களுக்குத் தெரிந்தவராக இல்லாமல், உங்களை ஏமாற்ற முயற்சிக்கும் ஒரு மோசடிக்காரராக இருந்தால் என்ன செய்வது?
Surveyஇப்போதெல்லாம் இதுபோன்ற சைபர் மோசடிகள் நடந்து வருகின்றன. சைபர் குற்றவாளிகள், மக்களை ஏமாற்றுவதற்காக ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் வொயிஸ் காப்பி மற்றும் நம்பர் போலியாக்கம் போன்ற அபாயகரமான முறைகளைப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற மோசடிகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க, காலின் போதே போலிக் வொயிஸ்கலை அடையாளம் காணக்கூடிய ஒரு புதிய மற்றும் முக்கியமான அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
நம் வொயிஸ் நமக்கே தெரியாமல் திருடப்படுகிறது.
முன்பு, மோசடிக்காரர்கள் அறியாத போன்களிலிருந்து கால் செய்வதன் மூலமோ அல்லது லாட்டரி சலுகைகளைக் காட்டியோ மக்களை ஏமாற்றி வந்தனர். ஆனால், மக்கள் தெரியாத நம்பரிலிருந்து கால்களை எடுப்பதை நிறுத்தியபோது, மோசடிக்காரர்கள் ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளனர். இப்போது மோசடிக்காரர்கள், உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது அலுவலக மேலதிகாரிகளின் உண்மையான போன் நம்பர்களை கம்பயூட்டர் செட்டிங்கில் போலியாகப் பதிவேற்றுகிறார்கள். பின்னர், ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) டூலை பயன்படுத்தி, அவர்களின் உண்மையான வைச்களை போலப் பேசி உங்களை அழைக்கிறார்கள். இந்தக் வொயிஸ்கள் மிகவும் உண்மையாக இருப்பதால், யார் வேண்டுமானாலும் எளிதில் ஏமாற்றப்படலாம்.
நமது வொயிஸ் டிவைஸில் சரிபார்க்கப்படும்.
இந்தப் புதிய மோசடியிலிருந்து பயனர்களைப் பாதுகாக்க, கூகிள் ஒரு தனித்துவமான முறையை உருவாக்கியுள்ளது. கூகிளின் கூற்றுப்படி, இனி வொயிஸ் மட்டும் நம்ப முடியாது, எனவே காலை மேற்கொள்ளும் போனான போனிலும் சரிபார்க்கப்படும். இந்த அமைப்பு ஒரு டிஜிட்டல் கைக்குலுக்கல் போல செயல்படுகிறது.
உண்மையான கால்
உங்களுக்குத் தெரிந்த ஒருவர் கூகுள் ஃபோன் ஆப்பை பயன்படுத்தி உங்களை அழைக்கும்போது, அவருடைய போன் பேக்ரவுண்டில் ஒரு சத்தமில்லாத வெரிபிகேஷனுக்கு சிக்னலை அனுப்பும். இதன் மூலம், அந்த கால் உண்மையான போனிலிருந்து வருகிறதா அல்லது மோசடிக்காரரிடமிருந்து வருகிறதா என்பதை உங்கள் போன் அறிந்துகொள்ளும்.
இதையும் படிங்க புதுசா பரவும் நூதன திருட்டு போனை Reset செய்தது ஒரு குத்தமா மொத்த பணமும் அக்கவுண்டில் காலி
போலி கால்கள்
இருப்பினும், ஒரு ஸ்கேமர் தனது நம்பர் மற்றும் வொயிஸ் பயன்படுத்தி கால் செய்தால் , வெரிபிகேஷன் சிக்னல் இருக்காது. உங்கள் போன் உடனடியாக அந்த நபரின் உண்மையான போனை தொடர்புகொள்ளும். உண்மையான போனிலிருந்து எந்த காலும் வரவில்லை என்று தகவல் வந்தால், உங்கள் ஆண்ட்ராய்டு போனின் ஸ்க்ரீனில் அது ஒரு போலி கால் என்பதைக் குறிக்கும் எச்சரிக்கை உடனடியாகத் தோன்றி, காலை துண்டிக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்தும்.
மோசடி செய்பவர்களால் ஒருவரின் வொயிசையும் போன் நம்பரையும் திருட முடியும், ஆனால் அவர்களது உண்மையான போன் நம்பரை திருட முடியாது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், கூகுள் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அம்சம் எப்பொழுது யாருக்கு கிடைக்கும்?
கூகிள் இந்த அம்சத்தை இந்த மாதம் முதல் பிரவுசர் வெளியிட உள்ளது. ஆண்ட்ராய்டு 12 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்சனில் இயங்கும் போன்களில், கூகிள் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் தொடங்கி, ‘ஃபோன் பை கூகிள்’ ஆப்யில் இது கிடைக்கும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
