டேட்டா லீக் காரணம் COWIN இல்லை அரசு அதிரடி, ஹேக்கர் கூறியது என்ன ?

HIGHLIGHTS

அனைவரின் போன் நம்பர், ஆதார் நம்பர் , பிறந்த தேதி மற்றும் பிற முக்கிய தகவல்களை டெலிகிராம் போட் மூலம் லீக் ஆகியுள்ளது

டேட்டா லீக் குறித்து அரசு கூறியது என்னவென்றால்,அதிகாரப்பூர்வ அறிக்கையும் வந்துள்ளது

ட்டா லீக் பற்றிய அறிக்கைகள் ஆதாரமற்றவை என்று கூறப்பட்டுள்ளது

டேட்டா லீக் காரணம் COWIN இல்லை  அரசு அதிரடி, ஹேக்கர் கூறியது என்ன ?

அரசு அதிரடியாக கூறியது என்னெவென்றால், டேட்டா லீக் தொடர்பாக கோவின் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தி தடுப்பூசியை எடுத்துக் கொண்ட அனைவரின் போன்  நம்பர், ஆதார் நம்பர் , பிறந்த தேதி மற்றும் பிற முக்கிய தகவல்களை டெலிகிராம் போட் மூலம் லீக் ஆகியுள்ளது. இந்த தகவல் டெலிகிராம் தளத்தில் கிடைக்கிறது. அதாவது கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் கோவிட் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட அனைவரின் தனிப்பட்ட தகவல்களும் பகிரங்கமாகிவிடும் அபாயம் உள்ளது. தகவல் லீக் குறித்து அரசு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கையும் வந்துள்ளது. கோவின் போர்டல் முற்றிலும் பாதுகாப்பானது என்று அரசாங்கம் கூறுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

டேட்டா லீக் குறித்து அரசு கூறியது என்ன ?

டேட்டா லீக் குறித்து அரசு கூறியது என்னவென்றால்,அதிகாரப்பூர்வ அறிக்கையும் வந்துள்ளது. சுகாதார அமைச்சகத்தின் கோவின் போர்டல் டேட்டா ப்ரைவசிக்கன பாதுகாப்புகளுடன் முற்றிலும் பாதுகாப்பானது என்று அரசாங்கம் கூறுகிறது. டேட்டா லீக் பற்றிய அறிக்கைகள் ஆதாரமற்றவை  என்று கூறப்பட்டுள்ளது 

அறியாதவர்களுக்கு, CoWIN என்பது கோவிட்-19 தடுப்பூசி பதிவுக்கான இந்திய அரசாங்க இணையதள போர்டல் ஆகும். இது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நிர்வகிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. என்று  தான் அர்த்தம் 

மத்திய அமைச்சர் கூறியது என்ன்வென்றால் 

இதை மத்திய தொழில் முனைவோர், திறன் மேம்பாடு, எலக்ட்ரோனிக் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ட்வீட் மூலம் உறுதி செய்துள்ளார். இருப்பினும், போட் அணுகக்கூடிய டேட்டா "முன்பு திருடப்பட்ட டேட்டாக்களிருந்து" சேகரிக்கப்பட்டது என்று அவர் கூறுகிறார். CoWIN வெப்சைட்டோ அல்லது செயலியோ நேரடியாக எந்த டேட்டாவையும் லீக் செய்யவில்லை என்றும் அவர் மேலும் கூறுகிறார். பொதுமக்களுக்கு உறுதியளிக்கும் வகையில், அனைத்து அரசாங்கத்திலும் ஒருங்கிணைந்த டேட்டா ஸ்டோரேஜ் ,அணுகல் மற்றும் பாதுகாப்புத் டேட்டாக்களுடன் கூடிய தேசிய டேட்டா ஆளுமைக் கொள்கை இறுதி செய்யப்பட்டுள்ளது தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Digit.in
Logo
Digit.in
Logo