இந்த ஆண்டின் கடைசி Chandra Grahan 2022 இன்று நடைபெறும் முழு விவரங்களை இங்கே பாருங்கள்.

HIGHLIGHTS

சந்திர கிரகணம் முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்

சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படும்.

செவ்வாய்க்கிழமை (08 நவம்பர் 2022) - முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இந்த ஆண்டின்  கடைசி Chandra Grahan 2022 இன்று  நடைபெறும் முழு விவரங்களை இங்கே பாருங்கள்.

சந்திர கிரகணம் முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படும். முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

செவ்வாய்க்கிழமை (08 நவம்பர் 2022) – முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் முழு சந்திர கிரகணத்தைப் பார்க்க இயலாது . ஏனெனில் சந்திர உதயத்திற்கு முன்பாகவே மொத்த நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கும். முழு மற்றும் பல்வேறு பகுதி வடிவ நிலைகளின் முடிவினை நாட்டின் கிழக்குப் பகுதிகளில் காண முடியும்.

இந்தியாவின் பெரும்பகுதியில் கிரகணம் தெரியாது என்றாலும், கொல்கத்தா போன்ற கிழக்கு பகுதிகளில் மட்டுமே இதன் இறுதி நிலைக்களைக் காணலாம். கொல்கத்தாவில் சந்திரன், கிழக்கு அடிவானத்தில் இருந்து மாலை 4.52 மணிக்கு உதயமாகும் என்று கணக்கிடப்படுகிறது. மேகமூட்டம் இல்லாமல் இருந்து வானத்தின் வெளிச்சம் குறைந்தால் 5.11 மணி வரை நிகழும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க வாய்ப்புள்ளது. சந்திர கிரகணம் முடியும் பிற்பகுதியை இந்தியாவின் கிழக்கு பகுதி மக்கள் காணமுடியும் .

இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குச் செல்லச் செல்ல சந்திர கிரகணத்தைப் பார்க்க இயலும். இந்தப் பகுதிகளில், சந்திர கிரகணம் பொதுவாக எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் ஏற்படும். மேற்கு வானில் சூரியன் அந்தி சாயும் போது, கிழக்கு வானில் நிலவு வெளிப்படும் நேரத்தில் குறைவான காலகட்டத்தில் பகுதி சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo