Android 10 Go எடிசன் அறிமுகம், இனி என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களும் இருக்கும் ரொம்ப பாஸ்ட்.

Android 10 Go எடிசன் அறிமுகம், இனி என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களும் இருக்கும் ரொம்ப பாஸ்ட்.
HIGHLIGHTS

ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் மிகவும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக கூகிளின் தயாரிப்பு மேலாண்மை இயக்குனர் சாகர் காம்தார் தெரிவித்தார்

கூகிள் கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு கோ எடிசன் அறிமுகப்படுத்தியது. Android Go இல், என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்கள் 1.5GB அல்லது அதற்கும் குறைவான ரேம் மூலம் இயங்குகின்றன. இப்போது கூகிள் ஆண்ட்ராய்டு 10 (கோ பதிப்பு) ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாப்ட்வெர் மூலம், பட்ஜெட் சாதனங்கள் மிக விரைவான பர்போன்ஸை வழங்க முடியும். ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் மிகவும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக கூகிளின் தயாரிப்பு மேலாண்மை இயக்குனர் சாகர் காம்தார் தெரிவித்தார்.

இனி ஆப் ஓபன் செய்வதற்கு குறைந்த நேரமே ஆகும்.

புதிய ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் வெர்சனை பற்றி பேசிய காம்தார், இது என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பயன்பாடுகளை விரைவாக மாற்றவும் மெமரி சேமிக்கவும் உதவும் என்று கூறினார். ஆப் திறக்க எடுக்கப்பட்ட நேரம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய சாப்ட்வெர் , செக்யூரிட்டிக்காக புதிய இன்க்ரிப்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது, இது பயனர்களின் டேட்டாவை பாதுகாப்பாக வைத்திருக்கிறது. சாகர் காம்தார், 'உங்கள் சாதனம் தவறான கைகளில் விழுந்தாலும் குறியாக்கம் எங்கள் டிஜிட்டல் பாதுகாப்பை பலப்படுத்துகிறது. அதனால்தான் புதிய என்க்ரிப்ஷன் அடியண்டம் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் பயன்படுத்தப்பட்டுள்ளது, இது என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களுக்காக கூகிள் உருவாக்கியுள்ளது. முன்னதாக, பார்போமான்ஸ் பாதிக்காமல் என்ட்ரி லெவல் போனின் குறியாக்கத்தைப் பயன்படுத்த முடியாது.

இந்த எடிசன் , கூகிள் கோ, யூடியூப் கோ மற்றும் கேலரி கோ போன்ற பயன்பாடுகள் முன்பை விட வேகமாகவும் சிறப்பாகவும் செய்யப்பட்டுள்ளன. எந்த என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் பயனர்களும் வேகமான Android அனுபவத்தை எடுக்க முடியும். இந்த வெர்சன் உள்ள YouTube கோ பயன்பாட்டு அளவு 10MB ஆகும். கூகிள் இந்த மென்பொருளை எப்போது தொடங்கும் என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo