AC,TV மற்றும் ப்ரிட்ஜ் போன்ற அப்ளயன்ஸ் விலை நாளை அக்டோபர் 1 முதல் அதிகரிக்கும்

HIGHLIGHTS

அக்டோபர் 1 அதாவது நாளை முதல் அப்லையன்ஸ் விலை அதிகரிக்கும்

காப்பர் மற்றும் சில்வர் போன்ற விலை அதிகரிப்பின் முக்கிய காரணமாகும்.

இதன் விலை 5 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதம் வரை உயர்த்தப்படும்

நீங்கள் இந்த தீபாவளிக்கு புதிய AC,TV ப்ரிட்ஜ் அல்லது வாஷிங் மெஷின் போன்றவற்றை வாங்க நினைத்தால் உங்களுக்கு இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது அக்டோபர் 1 அதாவது நாளை முதல் அப்லையன்ஸ் விலை அதிகரிக்கும். ஹோம் அப்லயன்சின் தயாரிக்க உதவியாக இருக்கும் காப்பர் மற்றும் சில்வர் போன்ற விலை அதிகரிப்பின் காரணத்தால் இதன் விலை 5 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதம் வரை உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது இதன் முழு தகவல் பார்க்கலாம் வாங்க.

இந்த 2026 ஆண்டில் மூன்றாவது கட்டமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது ஹோம் அப்ளயன்ஸ் தயாரிக்கும் தயாரிப்பாளர் இதற்க்கு முக்கிய காரணம் காப்பர்,அலுமினியம்,ஸ்டீல் மற்றும் கச்சா என்னை போன்றவற்றின் விலை அதிகரிப்பின் காரணமாக இந்த விலை மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது.

இதன் விலை எத்தனை சதவிகிதம் அதிகரித்துள்ளது

ரெப்ராஜிரேட்டர் விலைகள் 5 முதல் 8 சதவீதம் வரை உயரக்கூடும்; சில நிறுவனங்கள் வாஷிங் மெஷின் ,மற்றும் LED டிவிகளின் விலைகளையும் 3 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தி வருகின்றன, அதேவேளையில் மற்ற நிறுவனங்கள் அதன் தாக்கத்தை இன்னும் அதிகரிக்கலாம்.

அப்ளயன்ஸ் விலை அதிகரிப்பிற்கு காரணம் என்ன?

மூலப்பொருட்களின் விலை உயர்வுதான் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஹோம் அப்ளயன்ஸ் தயாரிப்பதற்கு முக்கியமாக இருப்பது காப்பர் அது இப்பொழுது பல மடங்கு அதுகரிதுள்ளது என ஹையர் (Haier India ) தலைவர் NS சதிஸ் கூறியுள்ளார் முன்பு கடந்த இதன் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு $8,000-$9,000 ஆகா இருந்தது, ஆனால் இப்பொழுது இதன் விலை உயர்த்தப்பட்டு $14,500 தொட்டுள்ளது மேலும் ஒரு AC ஏர் கண்டிஷனை தயாரிக்க 3-4 kg யின் காப்பர் தேவைப்படுகிறது என்கிறர்கள் AC தயாரிப்பளார்.

ப்ளூ ஸ்டார் தலைமை அதிகாரி பி. தியாகராஜன் பேசுகையில் காப்பர், ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் விலை அதிகரிப்பின் காரனத்தால் நிறவனங்கள் கட்டத்தின் கீழே இதன் விலை மூன்றாவது முறையாக உயர்த்துகிறது.

மின்சார வாகனங்கள் மற்றும் பரவலான மின்மயமாக்கல் காரணமாக செம்புக்கான தேவை அதிகரித்து வருகிறது. புதிய காப்பர் சுரங்கங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர பல ஆண்டுகள் ஆகக்கூடும் என்பதால், தேவைக்கு ஏற்ப டெலிவரி வேகமாக ஈடுசெய்வது கடினமாகிறது என்று அது குறிப்பிடுகிறது.

காப்பர் மீது அமெரிக்கா விதிக்கக்கூடிய சாத்தியமான வரிகள், சரக்குகளைப் பதுக்கி வைப்பதை ஊக்குவித்து, சப்ளையர்ஸ் அமெரிக்காவை நோக்கித் திசைதிருப்பி, மற்ற இடங்களில் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கக்கூடிய மற்றொரு காரணமாகும்.

எந்த பொருளில் விலை அதிகரிப்பு அதிகம் இருக்கும் ?

ஏர் கண்டிஷனர் AC யில் மிக பெரிய விலை அதிகரிப்பு நடைபெறும், ஏசியின் விலை கிட்டத்தட்ட 5-8%,ஏற்கனவே நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது Daikin செப்டம்பர் 16 முதல் 8-10% வரை அதிகரித்துள்ளது

ஹையர் நிறுவனம் அக்டோபர் 1 முதல் அறை குளிரூட்டிகளின் விலையை சுமார் 5% உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. மேலும், LED டிவிக்கள் மற்றும் சலவை இயந்திரங்கள் போன்ற பொருட்களுக்கு 2-3% விலை உயர்வு இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க அக்டோபர் 1 முதல் WhatsApp Business யில் மாறியது புதிய ரூல் இனி இலவசம் கிடையாது

இந்தியாவில் தாம்சன், கோடாக் மற்றும் ப்ளாபங்க்ட் உள்ளிட்ட தொலைக்காட்சி பிராண்டுகளை விற்பனை செய்யும் சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸ் நிறுவனம், அக்டோபருக்குப் பிறகு TV விலைகளை சுமார் 7% உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதேவேளையில் வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே 4-5% உயர்ந்துள்ளதாகவும் வெளியாகியுள்ளது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :