அடிக்கிற வெயிலுக்கு AC கூளிங்கே இல்லியா அப்போ இந்த 5 விஷயம் காரணமாக இருக்கலாம்

HIGHLIGHTS

AC வைத்தும் கூலிங் சரியாக வரவில்லை என புலம்பி தள்ளுகிற மக்கள்

கூலிங் காற்று சரியாக வரவில்லை என்றால், நம்முள் பலருக்கு AC பழுது ஆகிவிட்டது என தோன்றும்

கூலிங் குறைவதற்கான காரணம், நீங்களே எளிதில் புரிந்துகொண்டு சரிசெய்யக்கூடிய ஒரு டாப் 5 ட்ரிக்ஸ் பற்றி பார்க்கலாம்

அடிக்கிற வெயிலுக்கு AC கூளிங்கே இல்லியா அப்போ இந்த 5 விஷயம் காரணமாக இருக்கலாம்

தமிழ் நாட்டில் கொளுத்தும் வெயில் அதிகரித்து வரும் நிலையில் AC வைத்தும் கூலிங் சரியாக வரவில்லை என புலம்பி தள்ளுகிற மக்கள், இப்பொழுது AC அன்ன செய்து ஒரு மணி நேரம் ஆகியது ஆனால் இன்னும் கூலிங் காற்று சரியாக வரவில்லை என்றால், நம்முள் பலருக்கு AC பழுது ஆகிவிட்டது என தோன்றும் அல்லது இதை விற்று விட்டு வேறு ஒரு ஏசி வாங்க தோன்றும், ஆனால், இது எப்போதும் உண்மையாக இருப்பதில்லை. பெரும்பாலும், கூலிங் குறைவதற்கான காரணம், நீங்களே எளிதில் புரிந்துகொண்டு சரிசெய்யக்கூடிய ஒரு டாப் 5 ட்ரிக்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த 5 காரணங்களுக்காக உங்களின் AC கூலிங் குறைவாக இருக்கலாம்

1.மாசு கலந்த ஏர் பில்ட்டர்: ஏசியின் கூலிங் குறைவதற்கான மிகவும் பொதுவான காரணம், அழுக்கடைந்த காற்று பில்ட்டர் செய்வதாகும் . பில்ட்டரில் தூசி சேரும்போது, ​​காற்றோட்டம் தடைபடுகிறது, அதனால் ஏசியால் சரியாகக் கூளிங்கை தர முடிவதில்லை. எனவே, காற்று பில்ட்டர் தவறாமல் சுத்தம் செய்யுங்கள். சில வாரங்களுக்கு ஒருமுறை அதைக் கழுவுவது அல்லது மாற்றுவது உகந்த கூளிங்கை பராமரிக்க உதவுகிறது.

2.கூலிங் பற்றாகுறை : கூளிங் பற்றாகுறை என்பது ரூமிலிருந்து வெப்பத்தை உறிஞ்சும் ஒரு லீகேஜ் ஆகும். அதன் அளவு குறைந்தால், ஏசியின் கூலிங் பவர் குறைகிறது. இது பெரும்பாலும் ஒரு லீக்கின் காரணமாக ஏற்படுகிறது. ஏசி விசில் சத்தம் எழுப்பினாலோ அல்லது குழாய்களில் ஐஸ் உருவானாலோ, கேஸ் அளவு குறைந்துவிட்டதற்கான அறிகுறியாகும்.

3.தெர்மோஸ்டாட் செயலிழப்பு: தெர்மோஸ்டாட் ஏசியின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது. அது சரியாகச் செயல்படவில்லை என்றால், ஏசி தவறான சமிக்ஞைகளை அனுப்பி, கூளிங்கை பாதிக்கும். தெர்மோஸ்டாட்டின் செட்டிங்களை சரிபார்க்கவும் அல்லது தேவைப்பட்டால் அவற்றை மாற்றவும்.

4. கம்ப்ரசர் பிரச்சனைகள்: ஏசியின் மிக முக்கியமான பாகமான கம்ப்ரசர், அமைப்பு முழுவதும் கூலிங் பொருளைச் சுழற்சி செய்கிறது. அது பழுதடைந்தால், ஏசி சரியாகக் கூலிங் ஆகாது . இது ஒரு மிக பெரிய பிரச்சனை, இதற்கு ஒரு தொழில்நுட்ப வல்லுநர் தேவை.

5.தவறான ஏசி சைஸ் : உங்கள் அறைக்கு ஏசி மிகவும் சிறியதாக இருந்தால், அதனால் சரியான குளிர்ச்சியை வழங்க முடியாது. எனவே, அறையின் அளவிற்கு ஏற்ப சரியான டன்னேஜ் திறன் கொண்ட ஏசியை எப்போதும் தேர்ந்தெடுக்கவும்.

இதையும் படிங்க:வெயில் காலம் வந்தாலே ஊருல பவர் கட் இந்த Portable AC ஒரு முறை ரீச்சார்ஜ் செய்து வச்சுகொங்க நீங்க குளு குளு என இருக்கலாம்

AC சரியாக கூலிங் தராமல் இருந்தால் நீங்கள் முக்கியமாக செய்ய வேண்டிய காரணம்.

  • முதலில் ஏர் பில்ட்டர் சுத்தம் செய்வது
  • அவுட்டோர் யூனிட் செக் செய்யவும் அதில் தூசு அதிகம் இருந்தாலோ அல்லது குப்பை அதிகம் இருக்கிறது என்பதி கவனிக்கவும்.
  • பேசிக் செட்டிங் மற்றும் ஏர் சப்ளை சரியாக கவனிக்க வேண்டும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo