உங்களிடம் ஆதார் கார்ட் இருந்தால் 30,000 ஆயிரம் அரசு வழங்கும் அது எப்படி ? வாங்க பாக்கலாம்.

உங்களிடம்  ஆதார் கார்ட் இருந்தால் 30,000 ஆயிரம்  அரசு வழங்கும் அது எப்படி ? வாங்க பாக்கலாம்.

சமீபத்தில் my aadhaar online contest  என்ற  புதிய சேவையை ஆரம்பித்துள்ளது அதாவது  இந்த கண்டெஸ்ட் யின் கீழ்  ஆதார்  சேவைகளின்  தொடர்பான சிறந்த வீடியோக்களை  பதிவிட்டு அனுப்பு நபர்களுக்கு ரூ.30,000 வரையில் பரிசு வழங்கும் ஒரு போட்டியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவித்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

நாட்டின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு மட்டுமின்றி முக்கிய அடையாள அட்டையாக ‘ஆதார்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆதார் தொடர்பான சேவைகளை அனைத்து மக்களும் அறிந்துகொள்ளும் பொருட்டு, இது தொடர்பான ஒரு போட்டியினை மத்திய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவித்துள்ளது.

அந்த 30,000ரூபாய் எப்படி பெறுவது?:

இதை செய்ய நீங்கள் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். ஆதார் நம்பர் இருப்பது அவசியம். ஆதார் நம்பர் இல்லையென்றால் போட்டியில் பங்கேற்க முடியாது.

ஆதார் சேவைகள் தொடர்பாக வீடியோ 30 நிமிடங்கள் முதல் 120 நிமிடங்கள் வரை இருக்கலாம். கிராபிகல்/ அனிமேஷன் வடிவில் வீடியோ இருக்க வேண்டும்.

ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்வது, ஸ்டேட்டஸ் அப்டேட், ஆதார் கார்டில் முகவரியை மாற்றுவது, தொலைந்து போன ஆதாரைமீண்டும் டவுன்லோடு செய்வது, பயோ மெட்ரிக் லாக்/ அன்லாக் செய்தல், இ-மெயில், மொபைல் நம்பர் சரிபார்த்தல் உள்ளிட்ட சேவைகள் தொடர்பாக வீடியோ எடுக்க வேண்டும்.

Rs 30,000: வரையில் உள்ள பரிசு தொகை வெல்ல நீங்கள் செய்ய வேண்டியவை!
ஒரு வீடியோவில் ஒரு சேவை குறித்த தகவல்கள் தான் இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோக்களையும் அனுப்பலாம். வீடியோவில் வொய்ஸ் பதிவு தெளிவாக இருக்க வேண்டும்.

MP4, AVI, FLV, WMV, MPEG, MOV ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வடிவத்தில் வீடியோ இருந்தால் தான் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், வீடியோக்களை WeTransfer, SendSpace, DropBox, JumpShare, Hightail etc. ஆகிய வடிவத்திற்கு மாற்றி அனுப்ப வேண்டும்.

தயார் செய்த வீடியோக்களை media.division@uidai.net.in என்ற இ-மெயிலுக்கு போட்டியாளர்கள் தங்களது தனிப்பட்ட இ-மெயிலில் இருந்து அனுப்ப வேண்டும்.

வீடியோ அனுப்ப வேண்டிய கடைசி நாள்: ஜூலை 8, 2019

இறுதி முடிவுகள் வெளியாகும் நாள்: ஆகஸ்ட் 31, 2019

மொத்தமுள்ள 15 ஆதார் சேவைகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் மூவர் தேர்ந்தெடுக்கபடுவர். அதில் முதல் பரிசு – ரூ.20,000 இரண்டாம் பரிசு – ரூ.10,000 மூன்றாம் பரிசு – ரூ.5,000

இது தவிர ஒட்டுமொத்தமாக சிறந்த 3 வீடியோக்கள் செலக்ட் செய்யப்படும். அவற்றிக்கு முதல் பரிசு – ரூ.30,000 இரண்டாம் பரிசு – ரூ.20,000 மூன்றாம் பரிசு – ரூ.10,000 வழங்கப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo