PUBG மொபைல் இந்தியா விரைவில் வெளியாகும், நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

PUBG  மொபைல் இந்தியா விரைவில் வெளியாகும், நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS

இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் மீண்டும் வெளியாக இருக்கிறது.

இந்தியா கேமினை இந்திய சந்தையில் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது

இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் மீண்டும் வெளியாக இருக்கிறது. முன்னதாக பப்ஜி மொபைல் கேமிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் கேமினை இந்திய எல்லைக்குள் முழுமையாக முடக்கியது. பின் இந்த கேம் மீண்டும் வெளியாக இருப்பதாக பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தன.

இதுதவிர பப்ஜி கார்ப்பரேஷன் தாய் நிறுவனமான கிராப்டன் இன்க் இந்தியாவில் உள்ளூர் வீடியோ கேம், பொழுதுபோக்கு, இ ஸ்போர்ட்ஸ் மற்றும் ஐடி துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் 100 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது.

தற்சமயம் பப்ஜி கார்ப்பரேஷன் பப்ஜி மொபைல் இந்தியா கேமினை இந்திய சந்தையில் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்த கேம் இந்தியர்களுக்காக கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கும் என பப்ஜி கார்ப்பரேஷன் அறிவித்து உள்ளது.

இம்முறை பப்ஜி கேம் இளம் கேமர்கள் பரிந்துரைக்கப்பட்ட கேம்பிளே வழக்கங்களில் ஈடுபட கட்டுப்பாடுகள் இருக்கும். மேலும் கேம் விர்ச்சுவல் சிமுலேஷன் டிரெய்னிங் கிரவுண்டில் துவங்கி கேம் கதாபாத்திரங்கள் ஆடை அணிந்து கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டு இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo