Forza ஸ்டிரீட் இலவச ரேசிங் கேம் அறிமுகம்

HIGHLIGHTS

போர்சா ஸ்டிரீட் கேமினை ஜூன் 5 ஆம் தேதி வரை விளையாடுவோருக்கு 2017 ஃபோர்டு ஜிடி வழங்கப்படும்

Forza ஸ்டிரீட் இலவச ரேசிங் கேம் அறிமுகம்

ஃபோர்சா ஸ்டிரீட் எனும் ரேசிங் கேம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பிளே ஸ்டோர்களில் கிடைக்கிறது. சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு இருக்கும் புதிய ரேசிங் கேம் ஒவ்வொரு போட்டியில் வென்று புதிய கார்களை வாங்குவது மற்றும் கார் பாகங்களை அப்கிரேடு செய்து கார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த கேம் ஸ்டிரீட் ரேசிங் சார்ந்தது ஆகும். இதில் அதிக மர்மங்கள் இருப்பதால், விளையாடும் போது ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கிறது. இதுதவிர ஒவ்வொரு வாரமும் சிறப்பு நிகழ்வுகள், மற்றும் தீம்டு நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை தழுவியும் இந்த கேம் நகர்வது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதோடு கேம் கிரெடிட்கள் மற்றும் புதிய கார்களை அன்லாக் செய்யும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
கேம் வெளியீட்டை கொண்டாடும் வகையில், போர்சா ஸ்டிரீட் கேமினை ஜூன் 5 ஆம் தேதி வரை விளையாடுவோருக்கு  2017 ஃபோர்டு ஜிடி வழங்கப்படும். 

மற்றவர்களுடன் விளையாடும் போது அதிக கார்களை சேகரிக்க ஒவ்வொரு வாரமும் மற்ற பயனர்களுடன் நிகழ்வுகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுவோர் கேமிங் குழுவினரின் பட்டியலில் முன்னேற முடியும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile