Sony LinkBuds Clip
ஜப்பானிய சவுண்ட் மற்றும் எலெக்ட்ரோனிக் பிராண்டான Sony, இந்தியாவில் LinkBuds Clip அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அந்நிறுவனத்தின் புதிய, காதுகளைத் திறக்கும் வகையிலான, டருளி வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்போன்கள் ஆகும். சோனி ஏற்கனவே இந்த ஆண்டு வட அமெரிக்காவில் சர்வதேச அளவில் இவற்றை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது இந்தியாவிற்கும் கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய இயர்போன்கள், பயனர்கள் தங்கள் சுற்றுப்புறத்தை எளிதாகக் கேட்க உதவும். லிங்க்பட்ஸ் கிளிப்பில் ஆர்டிபிசியல் இண்டேளிஜச்ன்ஸ் (AI) உதவியுடன் கூடிய வொயிஸ் ப்ரோசெஸ் உள்ளது. இதில் பலவிதமான கேட்கும் முறைகள், ப்ளூடூத் மல்டிபாயிண்ட் சப்போர்ட் மற்றும் பல அம்சங்கள் உள்ளன. இந்த இயர்போன்கள் மூலம் பயனர்களுக்கு வழங்கப்படும் அனைத்து அம்சங்களையும் விரிவாகப் பார்ப்போம்.
இந்தியாவில் Sony LinkBuds Clip-இன் விலை ₹18,990 ஆகும். இதன் விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இவை பச்சை (Green), கிரேஜ் (Greige), கருப்பு (Black) மற்றும் லாவெண்டர் (Lavender) ஆகிய நான்கு கவர்ச்சிகரமான நிறங்களில் கிடைக்கின்றன. இவற்றை ஆன்லைன் கடைகள் மற்றும் சோனியின் அதிகாரப்பூர்வ கடைகள் மற்றும் இணையதளம் ஆகியவற்றின் மூலம் நீங்கள் வாங்கலாம்.
சோனியின் புதிய ‘LinkBuds Clip’ இயர்போன்களின் சிறப்பம்சம் என்னவென்றால், இவை காதுக்குள் நுழைத்து அணியப்படுவதில்லை; மாறாக, ஒரு கிளிப்பைப் போல காதின் வெளிப்புறப் பகுதியில் இவை பொருத்திக்கொள்ளப்படுகின்றன. இதனால் பயனரின் காதுகள் முழுமையாகத் திறந்த நிலையிலேயே இருப்பதால், அவர்களைச் சுற்றியுள்ள சவுண்ட்களை அவர்களால் கேட்க முடிகிறது.
இந்தச் சோனி இயர்போன்கள் பயனர்களுக்கு மூன்று விதமான சவுண்ட் கேட்பு (Mode) முறைகளை வழங்குகின்றன; இவற்றை இருமுறை தட்டுவதன் மூலம் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
மேலும், இதில் சோனியின் DSEE (Digital Sound Enhancement Engine) தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது; இது சுருக்கப்பட்ட ஆடியோவின் தரத்தை மேம்படுத்தி, அசல் சவுண்டை போன்ற உணர்வை அளிக்கிறது.
தெளிவான கால்களுக்காக, இதில் இரட்டை மைக்ரோஃபோன்கள், போன் கண்டேக்ஷன் சவுண்ட் சென்சார் மற்றும் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் அடிப்படையிலான நோய்ஸ் குறைப்பு அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை பேக்ரவுண்ட் நோய்சை நீக்கி, உங்கள் வொயிஸ் மிகத் தெளிவாக வைத்திருக்க உதவுகின்றன.
இதையும் படிங்க பொளந்து கட்டுது ஆஃபர் boAt Aavante Soundbar யில் ஒரே அடியாக ரூ,20,041 வரை டிஸ்கவுண்ட்
பேட்டரி பவர் பொறுத்தவரை, முழுமையாக சார்ஜ் செய்தால் 37 மணிநேரம் வரை பயன்படுத்தலாம் என்று நிறுவனம் கூறுகிறது. இயர்பட்ஸ் (earbuds) மட்டும் 9 மணிநேரம் வரை செயல்படும்; சார்ஜிங் கேஸ் கூடுதலாக 28 மணிநேர பேக்கப் வசதியை வழங்குகிறது. வெறும் 3 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 1 மணிநேரம் வரை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இது வியர்வை மற்றும் லேசான தண்ணிரின் பாதுகாப்பிற்கான IPX4 ரேட்டிங்க கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டுக்கான ‘Fast Pair’ மற்றும் விண்டோஸுக்கான ‘Swift Pair’ ஆகிய வசதிகளை சப்போர்ட் செய்கிறது . ‘Sony Sound Connect’ செயலி மூலம் 10-பேண்ட் ஈக்வலைசரைப் (10-band equalizer) பயன்படுத்தி இதைச் சீரமைக்கலாம்; மேலும் இது ‘Google Gemini’-யையும் சப்போர்ட் செய்கிறது.