வாட்ஸ்அப்க்கு போட்டியாக தமிழன் உருவாக்கிய Zoho Arattai App

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 15 Jan 2021
HIGHLIGHTS
  • ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அரட்டை ஆப் உருவாகி இருக்கிறது

  • கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலி டவுன்லோட்களில் 50 ஆயிரத்தை கடந்து இருப்பதோடு, 4.7 ரேட்டிங் பெற்று இருக்கிறது

வாட்ஸ்அப்க்கு போட்டியாக தமிழன் உருவாக்கிய Zoho Arattai App
வாட்ஸ்அப்க்கு போட்டியாக தமிழன் உருவாக்கிய Zoho Arattai App

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் பிரைவசி பாலிசியை மாற்றுவதாக அறிவித்த பின் இந்த செயலிக்கு மாற்றாக வேறு செயலியை பயன்படுத்த இருப்பதாக பலர் தெரிவித்து வந்தனர். வாட்ஸ்அப் பயனர்களில் பலர் சிக்னல், டெலிகிராம் போன்றவற்றை இன்ஸ்டால் செய்து வருகின்றனர். 
 
பலர் இந்தியாவில் உருவான ஷார்ட் மெசேஜை பயன்படுத்தலாமா என பரிசீலனை செய்கின்றனர். இவர்களின் தேடலுக்கு பதில் கொடுக்கும் வகையில், ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அரட்டை ஆப் உருவாகி இருக்கிறது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தை ஸ்ரீதர் வேம்பு என்பவர் துவங்கி இருக்கிறார். தற்சமயம் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலி டவுன்லோட்களில் 50 ஆயிரத்தை கடந்து இருப்பதோடு, 4.7 ரேட்டிங் பெற்று இருக்கிறது.

எனினும், சேவையை சீராக இயக்க சில தரவுகள் மட்டும் பகிரப்படலாம் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது. இத்துடன் பயனரின் சில விவரங்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு அரசு நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் நபர்களுடன் பகிரப்பட நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அரட்டை ஆப் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. இதனால் அரட்டை செயலியில் குறுந்தகவல்கள் முழுமையான என்க்ரிப்ஷன் வசதி பெறவில்லை. எனினும், செயலி வெளியாகும் போது இந்த அம்சம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பயனர் அனுமதி இன்றி அவர்களின் தகவல் வெளியே செல்லாது என அரட்டை தெரிவித்து இருக்கிறது

logo
Sakunthala

coooollllllllll

email

Web Title: Zoho pulls a surprise with its Arattai alternative to WhatsApp
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status