WhatsApp யில் கிடைக்கும் புதிய வித தண்டனை 24 மணி நேரத்துக்கு அக்கவுன்ட் பயன்படுத்த முடியாது

WhatsApp யில் கிடைக்கும் புதிய வித தண்டனை 24 மணி நேரத்துக்கு அக்கவுன்ட் பயன்படுத்த முடியாது
HIGHLIGHTS

WhatsApp யின் புதிய Account Restriction அம்சம் கொண்டு வந்துள்ளது,

இந்த அம்சம் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுன்ட் சிறிது ப்ளாக் தடை செய்யும்,

உண்மையில், WhatsApp பாலிசி மிகவும் கண்டிப்பானது, விதிகளை மீறினால் அக்கவுன்ட் தடை (ban)செய்யப்படும்

WhatsApp யின் புதிய Account Restriction அம்சம் கொண்டு வந்துள்ளது, நீங்கள் தவறு செய்தால்இந்த அம்சம் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுன்ட் சிறிது ப்ளாக் தடை செய்யும்,, உண்மையில், WhatsApp பாலிசி மிகவும் கண்டிப்பானது, விதிகளை மீறினால் அக்கவுன்ட் தடை (ban) செய்யப்படும் . இருப்பினும், இப்போது வாட்ஸ்அப் அக்கவுன்ட் எப்போதும் தடை செய்யப்படாது. மாறாக, அக்கவுன்ட் சிறிது நேரம் பேன் செய்யப்படும் இதன் காரணமாக யாராலும் சேட் செய்யவோ அல்லது கால் செய்யவோ முடியாது.

WhatsApp Banக்கு பதிலாக ரெஸ்ட்ரிக் செய்யப்படும்.

இந்த அம்சத்தை பற்றி பேசினால் டெவலப்மென்ட் பக்கத்தில் இருக்கிறது, இருப்பினும் இதில் பீட்டா வெர்சன் ரோல்அவுட் செய்யப்படும் எனக்கூறப்படுகிறது அக்கவுண்டை பேன் செய்வது என்பது ஒரு தீர்வாகாது என்று மெட்டாவுக்குச் சொந்தமான பிளாட்பாரம் கருதுவதாக நம்பப்படுகிறது. மாறாக, அக்கவுன்ட் கட்டுப்படுத்தப்படும், இதனால் பயனர்கள் தங்கள் தவறை உணர முடியும். மேலும், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, பயனர்கள் மீண்டும் அக்கவுண்டை பயன்படுத்த முடியும்.

WhatsApp யில் வரும் பாப்அப் மெசேஜ்

WeBetaInfo அறிக்கையின்படி, வரவிருக்கும் அம்சத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, நீங்கள் ஏதேனும் தவறு செய்தால், உங்கள் அக்கவுன்ட் தடைசெய்யப்படும். மேலும், அக்கவுண்டில் ஒரு பாப்-அப் பாக்ஸ் தோன்றும், இது உங்கள் கணக்கு எத்தனை நாட்களுக்கு தடைசெய்யப்படும் என்பதை தெரிவிக்கும்.

இதை பேன் செய்ய காரணம் என்ன ?

இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பாரம் ஆன whatsapp அக்கவுண்டை பேன் செய்ய காரணம் என்னவென்றால், உதரணமாக நீங்கள் ஸ்பேம் மெசேஜ்களை அனுப்பியிருந்தால் அல்லது ஆட்டோமேட்டிக் மெசேஜ்கள் மற்றும் பல்க் மெசேஜ்களை அனுப்பியிருந்தால், உங்கள் அக்கவுன்ட் ப்ளாக் செய்ய முடியும்.

அக்கவுன்ட் எத்தனை நாட்களுக்கு பேன் செய்யப்படும்.

அக்கவுண்ட் பேன் செய்யப்பட்டால் பயனர்கள் 1 மணிநேரம் முதல் 24 மணிநேரம் வரை குறிப்பிட்ட காலத்திற்கு சேட் படிக்க முடியாது. இது ஒரு வகையான தண்டனையாக இருக்கும். இருப்பினும், ரெஸ்ட்ரிக்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் தொடர்ந்து மெசேஜ்களை பெறுவார்கள்.

இதையும் படிங்க:Airtel யின் இந்த திட்டத்திற்கு முன்பு ஜியோவின் மத்த பிளான் சும்மா

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo