WhatsApp யில் வருகிறது பைல் ஷேரிங் அம்சம் 2GB வரையிலான பைல் ஷேர் செய்ய முடியும்.

WhatsApp யில் வருகிறது பைல் ஷேரிங் அம்சம் 2GB வரையிலான பைல் ஷேர் செய்ய முடியும்.
HIGHLIGHTS

WhatsApp யில் ஒரு அம்சம் விரைவில் வரவுள்ளது, அதில் பைல்களை அருகிலுள்ள கண்டேக்ட்களுடன் உடனடியாகப் பகிரலாம்

இந்த அம்சம் சமீபத்திய பீட்டா பதிப்பில் சோதிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் பைல் ஷேரிங் செய்வது மிக எளிதானதாக மாறலாம்,

WhatsApp யில் ஒரு அம்சம் விரைவில் வரவுள்ளது, அதில் பைல்களை அருகிலுள்ள கண்டேக்ட்களுடன் உடனடியாகப் பகிரலாம். வாட்ஸ்அப் டிராக்கர் தளம் இதை வெளிப்படுத்தியுள்ளது. இது பற்றி பேசுகையில், இந்த அம்சம் சமீபத்திய பீட்டா பதிப்பில் சோதிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்த அம்சம் பைல் ஷேரிங்கிர்க்கு புளூடூத்தை பயன்படுத்துகிறது.

WhatsApp யில் பைல் ஷேரிங் அம்சம்

வாட்ஸ்அப் பைல் ஷேரிங் செய்வது மிக எளிதானதாக மாறலாம், WABetaInfo மெசேஜிங் பிளாட்பார்ம் நம்பினால், இந்த அம்சம் தற்பொழுது டெஸ்டிங்கில் இருக்கிறது, இதில் பயனர் 2ஜிபி அளவிலான பைலை ஒரு நொடியில் தன்னைச் சுற்றியுள்ள பயனர்களுடன் ஷேர் செய்து கொள்ள முடியும். இதன் பொருள் இப்போது பயனர் சேட்டில் பைல்களை ஷேர் அல்லது கிளவுட் ஸ்டோரேஜ் ஷேரிங் போன்ற தொந்தரவிலிருந்து விரைவில் விடுபெறலாம் இதற்காக பயனர்கள் ஆப் யின் ஷேர் பைல்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இங்கே பைல் இரண்டு பயனர்களுக்கு இடையில் மாற்றப்படும், மேலும் முழு பைல் மாற்றப்படும் வரை, பயனர்கள் இந்த பிரிவில் இருக்க வேண்டும்.

இந்த பைல் ஷேரிங் முறையானது எண்டு டு எண்டு வரையிலான என்க்ரிப்ஷனை மட்டுமே பயன்படுத்துகிறது, எனவே இங்கே பைல் ஷேரிங் வாட்ஸ்அப்பில் உள்ள ஸ்டாண்டர்ட் மோடில் பாதுகாப்பானது. தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பைல் ஷேரிங் பயனர் தனது போனை அசைக்க வேண்டும். மேலும், ப்ரைவசிக்காக பைல் ஷேரிங்கின் போது ஃபோன் நம்பர்களும் மறைக்கப்படும், மேலும் உங்கள் கண்டேக்ட் லிஸ்ட்டில் சேமிக்கப்படாத நபர்களால் பார்க்க முடியாது.

இதையும் படிங்க: Jio வெறும் 388 ரூபாயில் கிடைக்கும் 3 மாதங்கள் வரை Free Disney+ Hotstar டேட்டா அன்லிமிடெட் காலிங்

கூகுள் மற்றும் சாம்சங் சமீபத்தில் இதற்கான Quick Share அப்டேட்டை கொடுத்துள்ளன, இதன் மூலம் பைல்களை மிக எளிதாக மாற்ற முடியும். WhatsApp யின் வரவிருக்கும் இந்த அம்சம் பயனர்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.

வாட்ஸ்அப் யில் மற்ற அம்சம்

Whatsapp யின் வந்த மற்ற அப்டேட்களை பற்றி பேசினால், விரைவில் சேனல் பயனர்களுக்கு புதிய அப்டேட் கிடைக்கும், சேனலில் விரைவில் ஒரு போலிங் அம்சம், வொயிஸ் நோட்ஸ் மற்றும் ஸ்டேட்டசில் சேனல் அப்டேட்சை ஷேர் செய்யலாம், புதிய அப்டேட் சேனலில் என்கேஜ்மென்ட் அதிகரிக்கும், சேனல் அட்மின்கள் மெம்பர்களுக்கு போல்களை அனுப்ப அனுமதிக்கும். சேனல் அட்மின்கள் இப்போது வொயிஸ் நோட்ஸ் வடிவில் அப்டேட்களை அனுப்ப முடியும், மேலும் பயனர்களுடன் நேரடியான வழியில் இணைக்க அனுமதிக்கிறது. இது தவிர, வாட்ஸ்அப் சேனல் அப்டேட்களை இப்போது ஸ்டேட்டசிலும் ஷேர் செய்யலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo