WhatsApp plus
WhatsApp இப்பொழுது அதன் சொந்த பிளாட்பார்மில் புதிய எக்ஸ்ப்ரிமென்ட் செய்து வருகிறது, அந்நிறுவனம் தனிநபர்(individual) பயனர்களுக்கான சப்ஸ்க்ரிப்ஷன் மாடலை முதல் முறையாகச் டெஸ்ட்டிங் செய்து வருகிறது. இதன் பெயர் “WhatsApp Plus” ஆகும், இந்த புதிய ஆப்ஷனின் கீழ் அதிகமான கஷ்டமைஸ் மற்றும் மேம்பட்ட அம்சங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மெசேஜ் , வொயிஸ் மற்றும் வீடியோ காலிங் போன்ற ஆப்யின் அடிப்படை அம்சங்கள் முன்பைப் போலவே இலவசமாகவே இருக்கும் என்றும், ப்ரைவசியில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
WABetaInfo-வின்படி, வாட்ஸ்அப் பிளஸ் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்குச் சோதனையில் உள்ளதுடன், ஆண்ட்ராய்டின் சமீபத்திய பீட்டா பதிப்பிலும் (2.26.15.11) காணப்பட்டுள்ளது. இது முற்றிலும் விருப்பத்திற்குட்பட்ட சேவையாக விவரிக்கப்படுகிறது, அதாவது சந்தா செலுத்த விரும்பும் பயனர்கள் மட்டுமே சந்தா பெற முடியும். அனைத்து உரையாடல்கள் மற்றும் அழைப்புகளுக்கும் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
வாட்ஸ்அப் பிளஸ் பயனர்களுக்குப் பல புதிய தனிப்பயனாக்கங்களையும் மேம்பட்ட அம்சங்களையும் வழங்கும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது:
தற்போது, இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே சோதனை செய்யப்பட்டு வருகிறது, ஆனால் எதிர்காலத்தில் இதை iOS-க்கும் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. பயனர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும் வகையில், எதிர்காலத்தில் இந்த சப்ஸ்க்ரிப்ஷன் மேலும் பல அம்சங்கள் சேர்க்கப்படலாம் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இதையும் படிங்க TECNO யின் புதிய 5G போன் அறிமுகம் டாப் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பாருங்க
விலையைப் பொறுத்தவரை, முதற்கட்ட தகவல்களின்படி, இந்தச் சந்தா மாதத்திற்கு சுமார் €2.49 (ஏறக்குறைய ரூ. 272) ஆக இருக்கலாம் எனத் தெரிகிறது, இருப்பினும் இது சேவை தொடங்கும் போது மாற்றத்திற்கு உட்பட்டது. இந்தச் சேவை, கூகுள் ப்ளே ஸ்டோர் வழியாகத் தானாகப் புதுப்பிக்கப்படும் மாதிரியில் செயல்படும் என்றும், பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்துகொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்நிறுவனம் ஒரு மாத இலவச சோதனையையும் வழங்கக்கூடும்.