Whatsapp யில் விரைவில் வருகிறது புத்தம் புதிய இரு அம்சம் இனி ஜாலிதான் போங்க

Whatsapp யில் விரைவில்  வருகிறது  புத்தம் புதிய இரு அம்சம் இனி  ஜாலிதான் போங்க
HIGHLIGHTS

வாட்ஸ்அப்பில் சில புதிய அம்சங்கள் விரைவில் வர உள்ளன. அந்த அறிக்கையின்படி, Join missed calls மற்றும் பயோமெட்ரிக் lock எனப்படும் அம்சங்களில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது.

கூகிள் பிளே பீட்டா திட்டத்தின் மூலம் புதிய புதுப்பிப்பை சமர்ப்பித்துள்ளது

உலகின் மிகப்பெரிய இன்ஸ்டன்ட் செய்தி பயன்பாடான வாட்ஸ்அப்பில் சில புதிய அம்சங்கள் விரைவில் வர உள்ளன. அந்த அறிக்கையின்படி, Join missed calls மற்றும் பயோமெட்ரிக் lock எனப்படும் அம்சங்களில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. உண்மையில் வாட்ஸ்அப் சமீபத்தில் கூகிள் பிளே பீட்டா திட்டத்தின் மூலம் புதிய புதுப்பிப்பை சமர்ப்பித்துள்ளது. நிறுவனம் அதன் பீட்டா பதிப்பு மூலம் புதிய அம்சங்களை சோதிக்கும் மற்றும் தேவையான மாற்றங்களைச் செய்தபின், பொதுவான பயனர்களுக்கு இவை வெளியிடப்படும்.

Join Missed Calls அம்சம் 

WaBetaInfo இன் அறிக்கையின்படி, நிறுவனம் சில மாதங்களாக ஜொயின் மிஸ்ட் கால்கள் அம்சத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அம்சத்தின் நன்மை என்னவென்றால், பயனர் வாட்ஸ்அப்பில் க்ரூப் கால் தவறவிட்டாலும், பயனர் இன்னும் காலில் ஜோயின் செய்ய முடியும். இருப்பினும், அந்த நேரத்தில் க்ரூப் கால் இயங்கினால் மட்டுமே இது சாத்தியமாகும்.

Biometric Lock அம்சம் 

இதுவரை, பிங்கர்ப்ரின்ட் லோக்  அம்சம் வாட்ஸ்அப்பில் கிடைக்கிறது, ஆனால் விரைவில் பயனர்கள் பயோமெட்ரிக் லோக் அம்சத்தையும் பெற உள்ளனர். இதன் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப்பைப் பாதுகாக்க பிங்கர்ப்ரின்ட் லாக்கை பயன்படுத்த முடியும். மேலும், யாருடைய போன்களில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் இல்லை, இந்த அம்சம் பேஸ் ரெகக்கினேசன் பயன்படுத்தும்.

சமீபத்தில் மேம்பட்ட சர்ச் கிடைத்தது

சமீபத்தில், வாட்ஸ்அப் பயனர்களுக்கு மேம்பட்ட சர்க்க்கான விருப்பம் கிடைத்தது. இதன் மூலம் பயனர்கள் போட்டோக்கள் , வீடியோக்கள், இணைப்புகள், ஆடியோ, ஜிஃப் மற்றும் ஆவணங்களை வாட்ஸ்அப்பில் எளிதாக தேட முடியும். அதாவது, செய்திகளுக்கு கூடுதலாக, மீடியாபைல்களைத் தேடுவது எளிதாகிவிட்டது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo