வாட்ஸ்அப்க்கு அரசின் அதிரடி உத்தரவு

வாட்ஸ்அப்க்கு அரசின் அதிரடி உத்தரவு
HIGHLIGHTS

வாட்ஸ்அப் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ் அப், சமீபத்தில்  தனது தனியுரிமை கொள்கையில் மாற்றம் செய்தது. புதிய மாற்றத்திற்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு எழந்ததை தொடர்ந்து தனியுரிமை கொள்கையை அமலாக்குவதை வாட்ஸ்அப் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. 
 
இந்த நிலையில் வாட்ஸ்அப் புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட உச்சநீதிமன்றம்,  இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, வாட்ஸ் அப், பேஸ்புக்  ஆகியவை பதிளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தது. 

வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், வாட்ஸ்அப் செயலி இந்திய பயனர்களுக்கு மிக குறைந்த அளவு தனியுரிமையை வழங்க முயற்சித்துள்ளது. மேலும் பேஸ்புக்குடன் தகவல்களை பகிராவிட்டால் செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என உத்தரவு பிறப்பித்தது என வாதிட்டார். 

மனு விசாரணையின் போது, பணத்தை விட தனிப்பட்ட தகவல்களை இந்திய மக்கள் பெரிதாக  கருதுகின்றனர். மக்களின் தனியுரிமையை  பாதுகாக்க நாங்கள் தலையிட வேண்டியிருக்கும் என கருத்து இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo