நீண்ட நாள் காத்து கொண்டிருந்த WhatsApp அம்சம் வரபோகுது இனி உங்க நம்பரை யாருக்கு காட்ட வேண்டாம்

நீண்ட நாள் காத்து கொண்டிருந்த WhatsApp அம்சம் வரபோகுது இனி உங்க நம்பரை யாருக்கு காட்ட வேண்டாம்

WhatsApp New Feature: அடுத்த ஆண்டு வரவுள்ளது. 2026 முதல், உலகம் முழுவதும் WhatsApp பயன்படுத்துபவர்கள் தங்கள் போன் நம்பரை மறைக்க முடியும். போன் நம்பர் இல்லாமல் எந்த புதிய நபருடனும் சேட் செய்யலாம். மற்ற நபருக்கு உங்களை அறிமுகப்படுத்த பயனர்பெயர் (User Name) போதுமானதாக இருக்கும். எளிமையான மொழியில் விளக்க, இதுவரை நீங்கள் ஒருவருடன் சேட் செய்தால், அவர் உங்கள் மொபைல் நம்பரை அறிந்து கொள்ள முடியும் எனவே இந்த அம்சத்தின் மூலம் புதியதாக ஒருவர் உங்களிடம் சேட் செய்வதற்க்கு யூசர் நேம் போதுமானது அதேர்க்கான நம்பர் அவசியமில்லை .

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அடுத்த ஆண்டு முதல் நீங்கள் மொபைல் நம்பருக்கு பதிலாக யூசர்நேம் மூலமே சேட் செய்யலாம் . தங்கள் மொபைல் நம்பரை யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பாதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

WhatsApp User Name அம்சம் எப்பொழுது வரும்?

WABetaInfo அறிக்கையின்படி, மெட்டா வாட்ஸ்அப்பிற்காக ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த அம்சம் பயனர்களுக்கு User Name தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை வழங்கும். இந்த அம்சம் அடுத்த ஆண்டு தொடங்கி ஜூன் மாதத்திற்குள் முழுமையாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :BSNL ரூ,200க்குள் வரும் இந்த திட்டத்தில் கூடுதல் டிஸ்கவுண்ட் ஆனால் அன்லிமிடெட் காலிங், டேட்டா என பல நன்மை

வாட்ஸ்அப் பயனர்பெயர் அம்சம் காலின் போது பயனுள்ளதாக இருக்கும். மக்கள் வீடியோ மற்றும் ஆடியோ கால்களுக்கு இதைப் பயன்படுத்த முடியும். இதன் பொருள் வாட்ஸ்அப் கால்களை நம்பர் வெளிப்படுத்தாமலோ அல்லது வெளிப்படுத்தாமலோ செய்ய முடியும். அறிக்கைகளின்படி, ஒரு புதிய ‘பிஸ்னஸ் -நோக்குடைய பயனர் ஐடி’ (BSUID) அம்சமும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த அம்சம் வெளிவரும்போது, ​​அன்றாட பயனர்கள் பயனர்பெயர்களை அணுக முடியும் என்றாலும், பிஸ்னஸ்களுக்கு வாட்ஸ்அப் ஒரு உறுதியான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப்பின் API ஐப் பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களும் ஜூன் 2026க்குள் யூசர்நேம் அமைப்பை சப்போர்ட் அம்சத்தை பயன்படுத்த வேண்டும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

ஸ்பெமர் பாதுகாப்பு

நிச்சயமாக, யூசர்நேம் மோசடி செய்பவர்கள் அல்லது ஸ்பேமர்களையும் கவர்ந்திழுக்கக்கூடும். அதை எதிர்கொள்ள,WhatsApp User Name Keys” எனப்படும் கூடுதல் பாதுகாப்பு லேயரை கொண்டு வருகிறது, இது தேவையற்ற காண்டேக்ட்டை பில்ட்டர் செய்ய, சரியான லிங்கை சரிபார்க்கவும் உதவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo