Whatsapp நோட்டிபிகேஷன் தொல்லையில் இருந்து தப்பிக்க புதிய அம்சம் வந்தாச்சு.

Whatsapp  நோட்டிபிகேஷன்  தொல்லையில் இருந்து தப்பிக்க புதிய அம்சம் வந்தாச்சு.
HIGHLIGHTS

நோட்டிபிகேஷன் ம்யூட் ஆப்சன் ஆப் யில் கிடைக்கிறது மற்றும் இதில் பெரிய மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

இந்த அம்சம் Android பயன்பாட்டின் பீட்டா பதிப்பு 2.20.201.10 இல் காட்டப்பட்டுள்ளது

ம்யூட் விருப்பம் நீண்ட காலமாக பயனர்களுக்கு மிகவும் பிடித்தது மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

உலகளவில் பிரபலமான மெசேஜ் தளமான வாட்ஸ்அப்பை கோடி பயனர்கள் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், நீங்கள் எப்போதும் வாட்ஸ்அப்பில் சேட் செய்ய விரும்புகிறீர்கள்  அல்லது ஒவ்வொரு  கான்டெக்ட்டுக்கும் பதிலளித்த பிறகு அதன் பிறகு தொடர்ந்து வரும்  நோட்டிபிகேஷன் மெசேஜ் தொல்லை இருக்கிறது, சில நேரங்களில்  அதிர்ப்பூர்வ அல்லது பேமிலி  க்ரூபில்  தொடர்ந்து  வரும்  நோட்டிபிகேஷன் மெசேஜால்  பெரியதலைவலியே  வந்து விடுகிறது , இனி இது போன்ற  தொல்லைகளிலிருந்து  விடுபட நோட்டிபிகேஷன்  ம்யூட் ஆப்சன்  ஆப் யில் கிடைக்கிறது மற்றும் இதில் பெரிய  மாற்றமும்  செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் தொடர்பான அப்டேட்களை பகிர்ந்து கொள்ளும் WABetaInfo, பயனர்கள் விரைவில் வாட்ஸ்அப்பில் மீதமுள்ள பயனர்களை எப்போதும் ம்யூட் செய்ய முடியும் என்று கூறியுள்ளது. இப்போது வரை, பயனர்கள் ஒரு பயனரை அல்லது க்ரூப்பை8 மணி நேரம், ஒரு நாள் அல்லது ஒரு வருடம் கூட ம்யூட் விருப்பம் இருந்தது. இப்போது இந்த பட்டியலில் புதிய விருப்பம் சேர்க்கப்பட்டுள்ளது, அதற்கு  Mute Always என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த அம்சம் பீட்டா பயனர்களுடன் சோதிக்கப்படுகிறது, இது அடுத்த சில வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும்.

ஆண்ட்ராய்டு  பீட்டா வெர்சன்  அம்சம் 

இந்த அம்சம் Android பயன்பாட்டின் பீட்டா பதிப்பு 2.20.201.10 இல் காட்டப்பட்டுள்ளது. இந்த உதவியுடன், பயனர்கள் ஒரு கான்டெக்ட் அல்லது க்ரூப்பை எப்போதும் ம்யூட் செய்ய முடியும். நல்ல விஷயம் என்னவென்றால், முடக்கிய கான்டெக்ட் அல்லது க்ரூப் மெசேஜின் நோட்டிபிகேஷன் பெறப்படாவிட்டாலும், பயன்பாட்டைத் திறப்பதன் மூலம் அவற்றின் செய்திகளை பின்னர் படிக்க முடியும். தற்போது, ​​Android பயன்பாட்டின் பீட்டா பதிப்பு நீண்ட காலமாக சோதிக்கப்பட்டு வருகிறது, விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் வழங்கப்படும். இதற்குப் பிறகு, பயனர்கள் iOS பதிப்பிலும் புதுப்பிப்புகளைப் பெற முடியும் என்று நம்பப்படுகிறது.

செட்டிங்களை எவ்வாறு மாற்றுவது

ம்யூட் விருப்பம் நீண்ட காலமாக பயனர்களுக்கு மிகவும் பிடித்தது மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த அம்சத்தின் உதவியுடன் ஒரு பயனரைத் ப்லோக் செய்யாமல் நோட்டிபிகேஷன் வெளியேற்ற முடியும். சேட் அல்லது குரூப்பை ம்யூட் செய்வதற்க்கு , அதைத் திறந்து மேல் வலதுபுறத்தில் காட்டப்பட்டுள்ள 'Mute Notifications' ' விருப்பத்தைத் தட்டவும். புதிய அம்சத்தைப் பெற்ற பிறகு, 8 மணிநேரம், 1 நாள் மற்றும் 1 வருடத்திற்கு பதிலாக எப்போதும் என்ற விருப்பத்தை இங்கே காண்பீர்கள். always தேர்ந்தெடுக்கும் போது, ​​அந்த சேட்டின் நோட்டிபிகேஷன் உங்களுக்கு ஒருபோதும் தொந்தரவு வராது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo