பல ஆண்டுகளுக்கு பிறகு Twitter யில் ப்ளூ டிக் வெரிபிகேஷன் ஆரம்பம்.

பல ஆண்டுகளுக்கு பிறகு Twitter யில் ப்ளூ டிக் வெரிபிகேஷன் ஆரம்பம்.
HIGHLIGHTS

ட்விட்டர் மீண்டும் Blue Tick Verification துவங்கப்பட்டு இருக்கிறது

ட்விட்டரில் வெரிபிகேஷன் பெறுவதற்கான விதிமுறைகளில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

ட்விட்டர் சமூக வலைதள சேவையில் மீண்டும் வெரிபிகேஷன் துவங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர பயன்பாட்டில் இல்லாத, முழுமை பெறாத ட்விட்டர் கணக்குகளின் வெரிபிகேஷனை நீக்கவும் அந்நிறுவனம் துவங்கி உள்ளது. 

ட்விட்டர் மீண்டும்  Blue Tick Verification  இன்று (22 ஜனவரி 2021) தொடங்கியுள்ளது. இந்த மைக்ரோ பிளாக்கிங் தளங்களில் விரைவில் புதிய வெரிஃபைட்  அக்கவுண்ட்கள்  தோன்றும்(Blue Tick Verification சுய சேவை விண்ணப்ப போர்ட்டலைத்   (Self Serve Application Portal)  திறந்துவிட்டதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. இதன் பொருள் இப்போது நீல நிற டிக் சரிபார்க்க உங்கள் மைக்ரோ பிளாக்கிங் தளங்களில் உங்கள் கணக்கைப் பயன்படுத்தலாம்.


 
ட்விட்டரில் வெரிபிகேஷன் பெறுவதற்கான விதிமுறைகளில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இவை பயனர்கள் வழங்கிய கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது. 

இத்துடன் வெரிபிகேஷன் வழங்க முன்பை விட அதிக பிரிவுகளை சேர்க்க ட்விட்டர் திட்டமிட்டு உள்ளது. அதன்படி கல்வி, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மத தலைவர்கள் உள்ளிட்ட பிரிவுகள் சேர்க்கப்பட இருக்கின்றன. 

அதன்படி இனிமேல், ட்விட்டரில் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் பாளோவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வெரிபிகேஷன் வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக இது குறிப்பிட்ட நாட்டில் உள்ள பாளோவர்கள் எண்ணிக்கையை கொண்டு வழங்கப்பட்டு வந்தது.

தற்சமயம் இந்த பிரிவுகளை சேர்ந்தவர்கள் ட்விட்டரில் ஆர்வலர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இதர பிரிவுகளை தேர்வு செய்து வெரிபிகேஷனுக்கு விண்ணப்பிக்கலாம். 

ட்விட்டர் வலைதளம் அல்லது செயலியின் அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில் இருக்கும் ‘Request Verification’ ஆப்ஷனை க்ளிக் செய்து, தேவையான ஆவணங்களை சமர்பித்து வெரிபிகேஷனுக்கு விண்ணபிக்க முடியும். 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo