Microsoft யின் புதிய அம்சம் ஒரே சமயத்தில் 49 பேருடன் வீடியோ கால் வசதி.

Microsoft யின் புதிய அம்சம் ஒரே சமயத்தில் 49 பேருடன் வீடியோ கால் வசதி.
HIGHLIGHTS

ஒரே சமயத்தில் 49 பேருடன் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ் சேவை ஜூம் மற்றும் இதர வீடியோ கால் சேவை

ஆஃபிஸ் 365 ப்ரோடக்டிவிட்டி சூட் மூலம் தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய சேவையாக உருவெடுத்து இருக்கிறது.

தற்சமயம் டீம்ஸ் சேவையில் விரைவில் ஒரே சமயத்தில் 49 பேருடன் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. டீம்ஸ் சேவையில் 7*7 வடிவில் 49 பேருடன் வீடியோ கால் பேசும் வசதி வழங்கப்பட இருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்து இருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ் சேவை ஜூம் மற்றும் இதர வீடியோ கால் சேவைகளுக்கு போட்டியை ஏற்படுத்தி வருகிறது. போட்டியை மேலும் கடுமையாக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. 
 
துவக்கத்தில் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களை குறிவைத்து துவங்கப்பட்ட டீம்ஸ் சேவையில் தற்சமயம் ஆஃபிஸ் 365 ப்ரோடக்டிவிட்டி சூட் மூலம் தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய சேவையாக உருவெடுத்து இருக்கிறது.

இந்த அப்டேட் மூலம் 40-க்கும் அதிக மாணவர்கள் கொண்ட வகுப்பறைகளில் மிக எளிமையாக ஆன்லைனில் பாடம் எடுக்க முடியும். மேலும் இந்த அம்சம் கொண்டே ஒரே திரையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உரையாட முடியும்.  மார்ச் மாதத்தில் உலகம் முழுக்க 18 நாடுகளில் சுமார் 25 ஆயிரம் புதிய கல்வியாளர்கள் டீம்ஸ் சேவையை பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo