இன்ஸ்டாகிராம் Reels யில் புதிய அம்சம். மாற்றம்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 28 Jul 2021
HIGHLIGHTS
  • இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் ரீல்ஸ் அம்சத்தை அதிகளவில் பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர்.

  • ரீல்ஸ் அம்சத்தின் வீடியோ கால அளவை 60 நொடிகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

  • ஆடியோவை எழுத்துக்களாக மாற்றும் கேப்ஷன் ஸ்டிக்கர் அம்சமும் இன்ஸ்டாவில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது

இன்ஸ்டாகிராம் Reels யில் புதிய அம்சம். மாற்றம்
இன்ஸ்டாகிராம் Reels யில் புதிய அம்சம். மாற்றம்

இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் ரீல்ஸ் அம்சத்தை அதிகளவில் பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக ரீல்ஸ் அம்சத்தின் வீடியோ கால அளவை 60 நொடிகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

தற்போதைய அப்டேட்டில் இந்த அம்சம் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ரீல்ஸ் அம்சத்தில் முன்னதாக வீடியோ கால அளவு 30 நொடிகளாக இருந்துவந்தது. ரீல்ஸ் அம்சத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றம் இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.

இத்துடன் ஆடியோவை எழுத்துக்களாக மாற்றும் கேப்ஷன் ஸ்டிக்கர் அம்சமும் இன்ஸ்டாவில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக கேப்ஷன் ஸ்டிக்கர் அம்சம் பரவலாக ஆங்கிலம் பயன்படுத்தப்படும் வெளிநாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Instagram increases time duration of reels feature
Tags:
Instagram Reels Instagram Reels Instagram Reels feature Reels time feature
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status