நீங்கள் ஒரு புதிய நகரத்திற்குப் பயணிக்க வேண்டியிருக்கும்போதோ அல்லது வழிதவறும்போதோ உங்களுக்கு வழிகாட்டக்கூடிய Google Maps, நீங்கள் ஒருபோதும் சாத்தியம் என்று கற்பனை செய்திராத ஒன்றைச் செய்யப் போகிறது. உங்கள் ஸ்மார்ட்போனில் உணவகங்களையும் டெலிவரி ஆப்களில் உள்ள தள்ளுபடிகளையும் தேடுவதில் செலவிடும் மணிநேரம் முடிவுக்கு வரப்போகிறது. நீங்களே உணவை ஆர்டர் செய்ய அனுமதிக்கும் ஒரு புதிய அப்டேட்டை கூகுள் மேப்ஸ் வெளியிட உள்ளது.
கூகுள் மேப்ஸின் இந்த புதிய அம்சம் மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, கூகுள் மேப்ஸின் புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன் 26.27.00.941319029-இன் கோடின் கீழ் சில சிறப்பு குறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆப்யின் பின்புலத்தில் “ask maps food ordering promo” போன்ற வரிகள் காணப்பட்டுள்ளன. இதன் மூலம், கூகுள் இந்த அம்சத்தை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும், பயனர்களை இதை முயற்சி செய்ய ஊக்குவிப்பதற்காக விளம்பரச் சலுகைகளை வழங்கக்கூடும் என்றும் தெரிகிறது.
இந்த அம்சமானது Google ஆழமான செயல்பாடு இருக்கிறது, இதில் தொடர்ந்து மக்கள் பயன்படுத்தும் பழக்க வழக்கங்களை கண்காணிக்கிறது அதாவது இதில் ஆர்டர் ஹிஸ்டரி மற்றும் தூண்டுதல்கள் , தனிப்பட்ட விருப்பங்களுக்குப் பதிலாக, கட்டணம் செலுத்தி முன்னிலைப்படுத்தப்பட்ட அல்லது அதிக ரேட்டிங் பெற்ற லிஸ்ட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும், ஒருவரின் கூகுள் அக்கவுண்டை வேறொருவர் அணுக நேர்ந்தால், அவர்கள் அனுமதியின்றி ஆர்டர்களைச் செய்யக்கூடும்; இது பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது அதாவது ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) உதவியுடன், கூகுள் மேப்ஸில் (Google Maps) சேமித்து வைக்கப்பட்டுள்ள தங்களுக்குப் பிடித்த உணவகங்களிலிருந்து பயனர்களால் ஆர்டர் செய்ய முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்..
தற்போதைய நிலையில், இந்த அப்டேட் (update) குறித்த எந்த விவரங்களையும் கூகுள் வெளியிடவில்லை, இருப்பினும் அம்சமானது உலகளவில் பீட்டா பதிவில் அமெரிக்காவில் 2026 தேதி பதிவாகியது, அதன் பிறகு உலகளவில் 2027 க்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் இந்த அம்சமானது நேரடியாக உணவகங்களில் இருந்து இந்த சிஸ்டம் வேலை செய்யுமா ஆலது மூன்ற தரப்பு ஆப் பயன்படுத்தப்படுமா என்பதை பற்றி சரியாக தெரியவில்லை, இது கிளவுட் செயலாக்கம் அல்லது சாதனத்திலேயேயான ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (on-device AI) சார்ந்திருக்கும்; இதனால், ஆரம்பத்தில் புதிய ஹார்ட்வேர்களில் மட்டுமே இது கிடைக்கப்பெறும் நிலை ஏற்படலாம்.
இதையும் படிங்க தூக்குங்கடா அந்த செல்லத்தை Flipkart Goat sale Vivo யின் ப்ரீமியம் போனில் லிஸ்ட்டிங் விலையிலிருந்து ரூ,6000 டிஸ்கவுண்ட்
சாப்பாடு ஆர்டர் செய்யும் வேலை க்ளவுட் அல்லது Gemini AI மூலம் செய்யமுடியுமா அல்லது அதன் சொந்த ஹார்ட்வேர் பயன்படுத்த படுமா என்பது தெளிவாக தெரியவில்லை.
ஆறுதலான விஷயம் என்னவென்றால், பணம் தொடர்பான விஷயங்களில் கூகுள் எந்தவிதமான அபாயத்தையும் ஏற்படுத்தாது. பயனர்களே பணம் செலுத்த வேண்டியிருக்கும்; ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) தானாகவே பணத்தை எடுத்துக்கொள்ள முடியாது.