Google Gemini ஆப்யில் AI இமேஜ் எடிட் மூலம் ஆளே அடையாளம் தெரியாதவர் போல புது புது இடங்களில் இருக்கலாம் எப்படி பாருங்க
இன்று Gemini app, யில் Google DeepMind.து ஒரு புதிய இமேஜ் எடிட்டிங் மாடலை வெளியிடுகிறது . ஆரம்பத்திலிருந்தே மக்கள் இதை மிகவும் பாராட்டி வருகின்றனர் – இது உலகின் சிறந்த டாப் ரேட்டட் பெற்ற போட்டோ எடிட்டிங் மாதிரி ஆகும் . இப்போது, இது ஜெமினி ஆப்யில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், என்ன்று கூறியுள்ளது
Surveyஎடிட்டிங்கில் கிடைக்கும் நன்மை என்ன ?
இது எடிட்டிங் செய்யும் போது மக்கள், செல்லப்பிராணிகள் மற்றும் எதாவது ஒரு பொருளை அழகாக்கும் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது AI-உருவாக்கிய இமேஜ் நீண்டகால சவாலாக இருந்தது. ஜெமினியில் ஏற்கனவே உள்ள சொந்த பட எடிட்டிங் அம்சங்களுக்குப் பிறகு இந்த அப்டேட் வருகிறது. புதிய மாடல் போட்டோக்களின் மாற்றங்களைச் செய்யும் போது அவற்றின் யதார்த்தத்தை (ஒற்றுமையை) பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று வெப் போஸ்ட்டில் கூறப்பட்டுள்ளது.
இது பெரும்பாலும் பிழைகளுக்கு வழிவகுக்கும் ஒரு பிரச்சனையாகும், குறிப்பாக பயனர்கள் முடி, உடை, முகபாவனைகள் மற்றும் பலவற்றை மாற்ற முயற்சிக்கும்போது. இந்த அப்டேட் அத்தகைய பிழைகளைக் குறைக்கும் என்றும், எடிட் இமேஜ் இன்னும் அசல் விஷயத்தைப் போலவே இருப்பதை உறுதி செய்யும் என்றும் கூகிள் கூறுகிறது. இதைப் பயன்படுத்த, பயனர்கள் ஜெமினிக்கு ஒரு ப்ராம்ட் மற்றும் ஒரு போட்டோவை வழங்க வேண்டும்.
இதையும் படிங்க:Hisense இந்த டிவியில் மெகா கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் அதிரடி டிஸ்கவுண்ட் உங்க வீடு இருக்கும் டாப்பு டக்கர்
இந்த புதிய அம்சத்தை எப்படி பயன்படுத்துவது?
- உங்களின் ஆடை அல்லது லொகேஷனை மாற்றலாம்: அதாவது நீங்கள் உங்களின் பல போட்டோ ஒரே நேரத்தில் அப்லோட் செய்து அந்த போட்டோவை ஒன்றாக சேர்த்து புதிய போட்டோவை உருவாக்கலாம் உதரணமாக இதில் ஒரு குழந்தை போட்டோவை பார்க்கலாம் முதலில் நாய் மற்றும் குழந்த போட்டோவை அப்லோட் செய்யப்படுகிறது அதன் பின் அந்த AI இமேஜ் மூலம் அந்த நாய் உடன் கிரவுண்டில் இருப்பதை பார்க்கலாம்.

- மல்ட்டி டர்ன் எடிட்டிங் :- ஜெமினி உருவாக்கும் படங்களை நீங்கள் தொடர்ந்து திருத்தலாம் – ஒரு காலியான ரூமை எடுத்து, சுவர்களை வண்ணம் தீட்டி, பின்னர் ஒரு புத்தக அலமாரி, சில தளபாடங்கள் அல்லது ஒரு காபி டேபிளைச் சேர்க்கவும். மீதமுள்ளவற்றைப் பாதுகாக்கும் அதே வேளையில், ஒரு படத்தின் குறிப்பிட்ட பகுதிகளை மாற்ற ஜெமினி உங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
- டிசைனை ஒன்று சேர்ப்பது (Mix up designs):அதாவது பலவிதமான டிசைன் மற்றும் கலரை ஒன்றாக சேர்த்து உருவாக்குவதாகும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile