பேஸ்புக் பயனர்களின் நலனை காக்க புதிய அம்சத்தை டெஸ்ட் செய்து வருகிறது

HIGHLIGHTS

பேஸ்புக் சேவையில் பயனர்கள் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது

பேஸ்புக் பயனர்களின் நலனை காக்க  புதிய அம்சத்தை டெஸ்ட் செய்து வருகிறது

பேஸ்புக் சேவையில் பயனர்கள் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது. யுவர் டைம் (Your Time) என அழைக்கப்படும் புதிய அம்சம் ஃபேஸ்புக் ஆன்ட்ராய்டு செயலியில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இந்த அம்சம் ஃபேஸ்புக் செயலியை எவ்வளவு நேரம் பயன்படுத்தினர் என்பதை பார்க்க முடியும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய வசதியை கொண்டு ஒவ்வொரு ஏழு நாட்களிலும், தினமும் சராசரியாக ஃபேஸ்புக் பயன்படுத்திய நேரத்தை தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் தினமும் ஃபேஸ்புக் பயன்படுத்த குறிப்பிட்ட கால அளவை நிர்ணயிக்க முடியும். இவ்வாறு செய்யும் போது, நீங்கள் செட் செய்த நேரத்தில் ஃபேஸ்புக் உங்களுக்கு நினைவூட்டும். 

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

“ஃபேஸ்புக்கில் பயனர் செலவழிக்கும் நேரம் சிறப்பானதாக இருக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.” என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர் ஃபேஸ்புக் சேவையை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து எப்போதும் அறிந்து கொள்ள முடியும்.

கூகுள், ஆப்பிள் போன்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் சொந்த ஸ்கிரீன் டைம் மானிட்டரிங் செய்யும் டேஷ்போர்டுகளை அறிமுகம் செய்துள்ளன. இவற்றை கொண்டு பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனினை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் மற்றும் ஒவ்வொரு செயலியில் அவர்கள் செலவிடும் நேரம் குறித்த விவரத்தை வழங்குகிறது.

மேலும் செயலிகளை குறிப்பிட்ட காலத்துக்கு பயன்படுத்தினால் போதும் என ரிமைன்டர் செட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரம் நிறைவுற்றதும், செயலி தானாக க்ளோஸ் ஆகிவிடும். இன்ஸ்டாகிராம் செயலியிலும் இந்த அம்சம் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது. இன்ஸ்டாவில இந்த அம்சம் டைம் ஸ்பென்ட் (time spent) என அழைக்கப்படுகிறது.

ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் தரம் குறைந்த வைரல் வீடியோக்கள் தோன்றுவதை குறைக்கும் படி அல்காரிதம் சமீபத்தில் மாற்றப்பட்டது. இதனால் 2017 நான்காவது காலாண்டில் வடஅமெரிக்க பகுதியில் ஃபேஸ்புக் பயன்பாடு தினசரி அடிப்படையில் 7,00,000 வரை குறைந்தது.

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo