புதிய Whatsapp Policy பிரச்னையால் ட்ரெண்ட் ஆகும் டெலிகிராம் மற்றும் சிக்னல்

HIGHLIGHTS

வாட்ஸ்அப் செயலியில் புதிய பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரைவசி மாற்ற விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதோடு சிக்னல் செயலியின் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது

புதிய Whatsapp Policy பிரச்னையால் ட்ரெண்ட் ஆகும் டெலிகிராம் மற்றும் சிக்னல்

வாட்ஸ்அப் செயலியில் புதிய பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்த எலான் மஸ்க் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதனை உறுதிப்படுத்தும் வகையில், சிக்னல் செயலி இந்தியா, ஆஸ்த்ரியா, பின்லாந்து, ஜெர்மனி, ஹாங்காங் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற பகுதிகளில் ஆப்பிள் ஆப் ஸ்டோரின் முன்னணி இலவச செயலிகள் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது. 

பிரைவசி மாற்ற விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதோடு சிக்னல் செயலியின் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. சிக்னல் மட்டுமின்றி டெலிகிராம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதகரிப்பதாக கூறப்படுகிறது.

அதிகப்படியான டவுன்லோட்களில் சிக்னல் செயலியின் சர்வெர்கள் முடங்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் பயனர்கள் சைன்-இன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தகவலை சிக்னல் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறது.

எலான் மஸ்க் மட்டுமின்றி ஆய்வாளரான எட்வர்ட் ஸ்னோடனும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்தார். மேலும் தான் சிக்னல் செயலியை பயன்படுத்தி வருவதாக தெகிவித்தார்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile