அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் நிறுவனம் செயல்பட துவங்கியது.
அமேசான், ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல் மற்றும் பேடிஎம் மால் போன்ற முன்னணி ஆன்லைன் வர்த்தக வலைதளங்களில் படிப்படியாக பணிகள் துவங்கியுள்ளன
மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், ஆன்லைன் சந்தை முடங்கியிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால், முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்களில் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான முன்பதிவு மீண்டும் துவங்கி இருக்கிறது.
Surveyஇருப்பினும், இது ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான முக்கிய நகரங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு மட்டும் ஆன்லைன் தள நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய முடியும்.
ஆன்லைன் தளங்கள் மீண்டும் செயல்பட துவங்கி இருப்பதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் சமூக இடைவெளியை சரியாக பின்பற்ற முடியும். மேலும் சிறு வியாபாரம் செய்வோரும் ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்ய முன்வரும் பட்சத்தில், ஊரடங்கின் போதும் தொடர்ந்து வருவாய் ஈட்ட முடியும் என கூறப்படுகிறது.
அமேசான், ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல் மற்றும் பேடிஎம் மால் போன்ற முன்னணி ஆன்லைன் வர்த்தக வலைதளங்களில் படிப்படியாக பணிகள் துவங்கியுள்ளன. இதனால் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் வசிப்போர் ஆன்லைன் தளங்களில் முன்பு இருந்ததை போன்று அனைத்துவிதமான பொருட்களையும் வாங்கிக் கொள்ள முடியும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
