ஆன்லைனில் ஆதார் கார்டை தவறுகளை திருத்துவது எப்படி ?

ஆன்லைனில் ஆதார் கார்டை தவறுகளை  திருத்துவது எப்படி ?
HIGHLIGHTS

ஆதார் கார்டின் பிழையை ஆன்லைனில் இருந்தபடி எப்படி மாற்றுவது வாருங்கள் பார்க்கலாம்.

ஆதார் கார்ட் இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது, எந்த ஒரு அரசாங்க வேலைக்கும் ஆதார் கார்ட் மிகவும் முக்கியமாக  தேவைப்படுகிறது, ஆனால் அதில பிழை இருந்தால்  ஆதார் கார்டின் அலுவலகத்த்துக்கு  செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது, ஆனால்  அப்படி இல்லாமல்  வீட்டில் இருந்தபடி முகவரி,  அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.அது எப்படி வாங்க பாக்கலாம்.

ஆதார் கார்டின் பிழையை ஆன்லைனில் இருந்தபடி எப்படி மாற்றுவது வாருங்கள் பார்க்கலாம்.

  1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
  2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
  3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
  4. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரெஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்..

ஆன்லைனில் இருந்தபடி ஆதார் கார்ட் அப்டேட் செய்ய குறிப்புகள்:-

  1. ஆதார்கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
  2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும். ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவுசெய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒரு வேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
  3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
  4. எந்தெந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
  5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும். அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும். பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றிதழ் மற்றும் உங்கள் புகைப் படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும். பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லோட் செய்ய வேண்டும்.
  6. முகவரியை அப்டேட் செய்யும்போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்யவேண்டும்.
  7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்யமுடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo