EPFO 3.0
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), EPFO 3.0 என அழைக்கப்படும் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, தனது சந்தாதாரர்களுக்காக ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) அல்லது UPI அடிப்படையிலான ATM யில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இந்த அம்சம் எப்போது வெளியிடப்படும் மற்றும் பயனர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி ஆன ப்ரோவிடன்ட் பன்ட் (PF) ஆகவுண்டிளிருந்து எவ்வளவு பணம் எடுக்க முடியும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
EPFO மூலம் நமது சம்பள பணத்திலிருந்து மாதந்திரம் ஒரு சிறிய தொகையை சேமிக்கபடுவது PF ஆகும், இது அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் இதை நமக்கு செய்கிறது, மேலும் இது நமக்கு பயனளிக்கும் வகையிலே இருக்கிறது அதாவது சிறிய தொகை பெரும் வெள்ளம் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு அந்த பணம் நமக்கே உதவியாக இருக்கும் மேலும் அரசின் EPFO 3.0 அறிமுகம் செய்யப்பட்டது அப்படி என்றால் என்ன மற்றும் UPI, ATM மூலம் பணம் எடுக்கலாம் அது எப்படி என்பதி முழுசா பார்க்கலாம் வாங்க.
EPFO 3.0 என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஒரு முக்கிய டிஜிட்டல் அப்டேட் முயற்சியாகும். இது பயனர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதி (PF) பணத்தை காகிதமில்லா (Paperless) முறையில் உடனடியாக எடுக்கவோ அல்லது ட்ரேன்ஸ்பர் செய்யவோ வழிவகுக்கும்.
இந்தப் புதிய அமைப்பு, பயனர்கள் தங்களது வருங்கால PF பணத்தை சேமிப்புகளை UPI மற்றும் UPI வசதி கொண்ட ATMகள் மூலம் நேரடியாக அணுகவும் ட்ரேன்ஸ்செக்ஷன் செய்யவும் அனுமதிப்பதன் மூலம், தாமதங்களை நீக்கும் .
EPFO 3.0 திட்டத்தின் கீழ், சந்தாதாரர்கள் பொருந்தக்கூடிய நிபந்தனைகளைப் பொறுத்து, தங்களின் EPF இருப்பில் 50% முதல் 75% வரை UPI அல்லது UPI வசதியுள்ள ATM-கள் மூலம் எடுக்க முடியும். அதற்கான சரியான விதிகள் மற்றும் வரம்புகள் பின்வருமாறு:
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்த மாத தொடக்கத்தில், அந்த வசதியின் சோதனை நிறைவடைந்துவிட்டதாகவும், இந்தச் சேவை விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இருப்பினும், அவர் சரியான தேதியைத் தெரிவிக்கவில்லை.
“மெம்பர் UPI பேமன்ட் கேட்வே பயன்படுத்தி EPF (ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி) தொகையை எடுக்கக்கூடிய வசதியை நாங்கள் டெஸ்ட்டிங் செய்து முடித்துள்ளோம். எடுக்கப்பட்ட தொகை உறுப்பினரின் பேங்க் அக்கவுண்டிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்,” என்று மண்டாவியா கூறினார்.
இதற்குக் காரணம், UPI அல்லது UPI-அடிப்படையிலான ஏடிஎம் (ATM) சேவை சந்தாதாரரின் வருங்கால வைப்பு நிதிக்கு (Provident Fund) மட்டுமே பொருந்தும் என்பதாகும். இதில் ஊழியர் மற்றும் வேலையளிப்பவர் ஆகிய இருவராலும் வருங்கால வைப்பு நிதிக்குச் செய்யப்படும் பங்களிப்புகளும் அடங்கும். ஓய்வூதியத்திற்காகச் செய்யப்படும் பங்களிப்புகள் இதனால் பாதிக்கப்படாது.
இதையும் படிங்க உங்கள் PAN கார்டை உங்களுக்கே தெரியாமல் ஒருவர் பயன்படுத்தினால் அதை எப்படி கண்டுபிடிப்பது?
EPFO உறுப்பினர்கள், உமாங் ஆப்யில் தங்களின் புதிய அல்லது ஏற்கனவே உள்ள யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை (UAN) செயல்படுத்த, முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப் (FAT) பயன்படுத்த முடியும்.
இது மெம்பர் தங்கள் பாஸ்புக்குகளை அணுக அனுமதிக்கும். – மெம்பர்கள் முழுமையற்ற தகவல்களைத் திருத்த முடியும். – மெம்பர்கள் ஆன்லைனிலும் ரெகுவஸ்ட் சமர்ப்பிக்க முடியும்