உங்கள் PAN கார்டை உங்களுக்கே தெரியாமல் ஒருவர் பயன்படுத்தினால் அதை எப்படி கண்டுபிடிப்பது?
PAN card என்பது முக்கியமான டாக்யூமென்ட் ஆகும், பேங்கில் அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் PAN கார்ட் அவசியம் தேவைப்படும், மேலும் இதன் மூலம் டேக்ஸ் (Tax) போன்றவைக்கு முக்கியமாக பயன்படும் ஆவணமாகும் மேலும் தற்பொழுது இந்தியா டிஜிட்டல் மையமாக மையமாக மாறியதிலிருந்து தொடர்ந்து பல மோசடி நடந்து வருகிறது, அந்த வகையில் பேன் உங்கள் கார்டை வைத்து வேறு ஒருவர் கடன் மற்றும் தவறுதலாக பயன்படுத்தலாம் எனவே உங்களின் PAN கார்ட் தவறுதலாக பயன்படுத்தினால் அதை எப்படி கண்டு பிடிப்பது பார்க்கலாம் வாங்க.
SurveyPAN Card (Fraud) மோசடி என்றால் என்ன?
PAN Card மோசடி என்பது, மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக பான் கார்ட்களை தவறாகப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. மோசடிக்காரர்கள், உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய குற்றச் செயல்களைச் செய்வதற்கு பான் கார்ட்களை குறிவைக்கின்றனர். இந்தியாவில் பல்வேறு வகையான பான் கார்ட் மோசடிகள் பதிவாகியுள்ளன, இதன் மூலம் பான் கார்டில் உண்மையான உரிமையாளர்கள் கணிசமான அளவு பணத்தையும் அதற்கும் மேலானவற்றையும் இழந்துள்ளனர்.
PAN card மோசடி எத்தனைவகைப்படும் ?
பேன் கார்ட் மோசடி பல வகைப்படும், மேலும் தற்பொழுது அதிக மக்கள் PAN card மோசடியில் சிக்குவது

- பண மோசடி செய்வதற்காக போலி அடையாள கார்ட்களை உருவாக்குதல்
- ப்ளாக் மணியின் காரணமாக டேக்சில் சிக்கவைப்பது
- அனுமதியின்றி கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது, இதில் ஒருவர் கடன் வாங்குவார், அதை நீங்கள் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.
- மோசடி நடவடிக்கைகளுக்காக பேங்க் அக்கவுண்டை திறப்பதற்கும், சட்டவிரோதப் ட்ரேன்ஸ்செக்ஷன்களை மேற்கொள்வதற்கும் ஆள்மாறாட்டம் செய்தல்.
- மோசடி செய்பவர்கள் உங்கள் பான் கார்டைப் பயன்படுத்தி நகைகள் உட்பட மதிப்புமிக்க பொருட்களை வாங்க முடியும்.
பிஷிங் PAN Card என்றால் என்ன
கார்ட் ஹோல்டரிடமிருந்து பான் கார்ட் விவரங்களைப் பெறுவதற்கு ஃபிஷிங் ஒரு பொதுவான முறையாகும். பொதுவான ஃபிஷிங் என்பது என்ன அதில் எத்தனை வகையானது என்பது பார்க்கலாம் வாங்க.
- மோசடிக்காரர்கள் SMS ஃபிஷிங் வெப்சைட் உடன் லிங்க் செய்கிறார்கள்.
- அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பேசுவதாகக் கூறி, உங்கள் பான் நம்பரை அப்டேட் செய்யுமாறு கேட்கும் மோசடி கால்கள் வரும். அரசு அதிகாரிகள் ஒருபோதும் கால்கள் அல்லது மெசேஜ்கள் மூலம் உங்கள் பான் நம்பரை அப்டேட் செய்ய கேட்க மாட்டார்கள்.
- அரசு அதிகாரிகள் அல்லது பேங்க்களிடமிருந்து வந்ததாகக் கூறி, பான் கார்டை விவரங்களைக் மூலம் போலி ஈமெயில் அனுப்புதல்.
- அதிகாரப்பூர்வ பேங்க் லோகின் பக்கங்கள் அல்லது அரசாங்க வெப்சைட் போலத் தோற்றமளிக்கும் மோசடி வெப்சைட்டுக்கு செல்லுதல்.
உங்கள் PAN card தவறாக பயன்படுத்தி இருந்தால் அதை கண்டு பிடிப்பது எப்படி?
யாராவது உங்கள் பான் கார்டைத் தவறாகப் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்டறிய, உங்கள் கிரெடிட் வேல்யூக்களை சரிபார்ப்பதே சிறந்த வழியாகும். உங்கள் பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க பல வழிகள் உள்ளன. பான் கார்டு மோசடியைக் கண்டறிய, கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
- ஸ்டேப் 1– வெப்சைட்டில் , டிரான்ஸ்யூனியன் CIBIL, UPI ஆப்கள் பேடிஎம், phone pe அல்லது CRED ஹை மார்க் போன்ற பல தகவல் நிறுவனங்களை நீங்கள் காணலாம். உங்கள் தேவைகளுக்குப் பொருத்தமான விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.
- ஸ்டேப் 2- வெப்சைட்டிற்கு சென்று, ” “Check credit score” என்ற விருப்பத்தைத் தேடுங்கள். சில சேவைகள் உங்களுக்கு முழுமையான கிரெடிட் ரெட்டிங்க்களை வழங்குவதற்கு முன்பு ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுக்கச் சொல்லலாம் என்றாலும், இது பொதுவாக இலவசமானது.
- ஸ்டேப் 3- உங்கள் பெயர், ஈமெயில் முகவரி, ரெஜிஸ்ட்டர் செய்யப்பட்ட போன் நம்பர் , பான் (PAN) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றுக்கான சரியான தகவல்களை உள்ளிடவும். உங்கள் போன் நம்பரை OTP மூலம் சரிபார்க்க வேண்டியிருக்கலாம்.
- ஸ்டேப் 4 – உங்கள் கிரெடிட் ரேட்டிங்கில் கிடைக்கும். உங்கள் பெயரில் தற்போது நிலுவையில் உள்ள கடன்களும் அதில் சேர்க்கப்படும்.

PAN card மோசடியில் சிக்காமல் நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி ?
உங்கள் பேன் கார்டை தவறான வழிகளில் சிக்காமல் பாதுகாக்க ஒரு சிலவற்றை அவசியமாக கவனிக்க வேண்டும் அதில்
- உங்கள் பான் விவரங்களை ஆன்லைனில், குறிப்பாக அங்கீகரிக்கப்படாத வேசைட்டில் வழியாக ஒருபோதும் பகிராதீர்கள். “https” எனத் தொடங்கும் URL-களைக் கொண்ட வெப்சைட்களை மட்டுமே பார்வையிடவும். இவை பாதுகாப்பான இணையதளங்கள் ஆகும்.
- உங்கள் பான் கார்டு தொடர்பான ட்ரேன்ஸ்செக்ஷன் களைக்கண்காணிக்க, படிவம் (form) 26AS-ஐப் பார்க்கவும்.
- அதிகாரப்பூர்வ வெப்சைட்களை எப்போதும் லிங்க்கள் வழியாக அல்லாமல், உங்கள் பிரவுசர் மூலமாக நேரடியாக அணுகவும்.
- தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதற்கு முன், நீங்கள் பார்வையிடும் அனைத்து இணையதளங்களின் நம்பகத்தன்மையையும் சரிபார்க்கவும்.
- பான் கார்டுகளின் நகல்களைச் சமர்ப்பிக்கும்போது, தவறான பயன்பாட்டைத் தடுக்க அவற்றைச் சான்றொப்பமிட்டிருப்பதை உறுதிசெய்யவும்.
- ஸ்ட்ரோங் பாஸ்வர்டை பயன்படுத்துங்கள்.
- உங்கள் பேங்க் அறிக்கைகளையும் கிரெடிட் வேல்யூ தவறாமல் கண்காணிக்கவும்.
இதையும் படிங்க உங்கள் போனை வைரஸ்லிருந்து பாதுகாப்பாக வைப்பது எப்படி?
உங்கள் PAN Card மோசடி நடந்திருந்தால் அதை புகரளிப்பது எப்படி ?
பான் கார்டு மோசடி குறித்துப் புகாரளிக்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- ஸ்டேப் 1: TIN NSDL அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு செல்லவும். ஹோம் பக்கத்தில், கஸ்டமர் கேர் செக்ஷனில் செல்லவும்.
- ஸ்டேப் 2: “ “Customer care ” எனக் குறிப்பிடும் டேப்பை தேர்ந்தெடுக்கவும் .அதன் ஒரு கீழ் டிராப் டவுன் போகஸ் தோன்றும்.
- ஸ்டேப் 3: கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, ” புகார்கள்/வினவல்கள்(“Complaints/Queries.”) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு புகார் பார்ம் திறக்கப்படும்.
- ஸ்டேப் 4: இந்தப் படிவத்தில்போர்மில் உங்கள் துல்லியமானடேட்டாகளையும் புகாரின் தன்மை குறித்த விளக்கத்தையும் உள்ளிடவும். கேப்ட்சா கோட் உள்ளிட்ட பிறகு, ” Submit” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
