Digit.in
  • செய்திகள்
  • பீச்சர் ஸ்டோரி
  • டிப்ஸ் & ட்ரிக்ஸ்
  • விசுவல் ஸ்டோரீஸ்
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » How To » General » EPFO 3.0 புதிய மாற்றம் அறிவிப்பு, இனி UPI மற்றும் ATM பணம் எடுக்கலாம், அது எப்படி இந்த அப்டேட்டின் விதிமுறை என்ன?

EPFO 3.0 புதிய மாற்றம் அறிவிப்பு, இனி UPI மற்றும் ATM பணம் எடுக்கலாம், அது எப்படி இந்த அப்டேட்டின் விதிமுறை என்ன?

By Sakunthala | Updated on 10-Jun-2026
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
EPFO 3.0 புதிய மாற்றம் அறிவிப்பு, இனி UPI மற்றும் ATM பணம் எடுக்கலாம், அது எப்படி இந்த அப்டேட்டின் விதிமுறை என்ன?
Sakunthala Sakunthala
10-Jun-2026

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), EPFO ​​3.0 என அழைக்கப்படும் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, தனது சந்தாதாரர்களுக்காக ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) அல்லது UPI அடிப்படையிலான ATM யில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இந்த அம்சம் எப்போது வெளியிடப்படும் மற்றும் பயனர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி ஆன ப்ரோவிடன்ட் பன்ட் (PF) ஆகவுண்டிளிருந்து எவ்வளவு பணம் எடுக்க முடியும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

EPFO மூலம் நமது சம்பள பணத்திலிருந்து மாதந்திரம் ஒரு சிறிய தொகையை சேமிக்கபடுவது PF ஆகும், இது அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் இதை நமக்கு செய்கிறது, மேலும் இது நமக்கு பயனளிக்கும் வகையிலே இருக்கிறது அதாவது சிறிய தொகை பெரும் வெள்ளம் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு அந்த பணம் நமக்கே உதவியாக இருக்கும் மேலும் அரசின் EPFO ​​3.0 அறிமுகம் செய்யப்பட்டது அப்படி என்றால் என்ன மற்றும் UPI, ATM மூலம் பணம் எடுக்கலாம் அது எப்படி என்பதி முழுசா பார்க்கலாம் வாங்க.

EPFO 3.0 என்றால் என்ன?

EPFO 3.0 என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஒரு முக்கிய டிஜிட்டல் அப்டேட் முயற்சியாகும். இது பயனர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதி (PF) பணத்தை காகிதமில்லா (Paperless) முறையில் உடனடியாக எடுக்கவோ அல்லது ட்ரேன்ஸ்பர் செய்யவோ வழிவகுக்கும்.

இந்தப் புதிய அமைப்பு, பயனர்கள் தங்களது வருங்கால PF பணத்தை சேமிப்புகளை UPI மற்றும் UPI வசதி கொண்ட ATMகள் மூலம் நேரடியாக அணுகவும் ட்ரேன்ஸ்செக்ஷன் செய்யவும் அனுமதிப்பதன் மூலம், தாமதங்களை நீக்கும் .

உங்கள் EPFO ​​அக்கவுன்டிலிருந்து எவ்வளவு பணம் எடுக்கலாம்?

EPFO 3.0 திட்டத்தின் கீழ், சந்தாதாரர்கள் பொருந்தக்கூடிய நிபந்தனைகளைப் பொறுத்து, தங்களின் EPF இருப்பில் 50% முதல் 75% வரை UPI அல்லது UPI வசதியுள்ள ATM-கள் மூலம் எடுக்க முடியும். அதற்கான சரியான விதிகள் மற்றும் வரம்புகள் பின்வருமாறு:

  • அதிகபட்ச திரும்பப் பெறும் லிமிட்: பொதுவாக, உங்கள் மொத்த EPF நிதியில் 50% முதல் 75% வரை நீங்கள் திரும்பப் பெற அனுமதிக்கப்படுவீர்கள்.
  • கட்டாய இருப்பு வரம்பு: உங்கள் மொத்த EPF பங்களிப்பில் குறைந்தபட்சம் 25% தொகையானது, எல்லா நேரங்களிலும் ஒரு கட்டாயக் காப்பு நிதியாகக் கணக்கில் இருக்க வேண்டும்.
  • ஆட்டோ செட்டில்மென்ட் லிமிட் : தற்போதுள்ள ₹ 1 லட்சத்திலிருந்து ஆட்டோமேட்டிக் செட்டில்மென்ட் லிமிட் ₹ 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது . இந்த லிமி உயர்வின் மூலம், பல EPFO ​​மெம்பர்கள் மருத்துவ சிகிச்சை, கல்வி, திருமணம் அல்லது வீடு வாங்குதல் மற்றும் கட்டுதல் போன்ற தேவைகளுக்காக மூன்று நாட்களுக்குள் தங்கள் EPF பணத்தை பெற முடியும்.

EPFO 3.0 வெளியீட்டு தேதி எப்போ ?

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்த மாத தொடக்கத்தில், அந்த வசதியின் சோதனை நிறைவடைந்துவிட்டதாகவும், இந்தச் சேவை விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இருப்பினும், அவர் சரியான தேதியைத் தெரிவிக்கவில்லை.

“மெம்பர் UPI பேமன்ட் கேட்வே பயன்படுத்தி EPF (ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி) தொகையை எடுக்கக்கூடிய வசதியை நாங்கள் டெஸ்ட்டிங் செய்து முடித்துள்ளோம். எடுக்கப்பட்ட தொகை உறுப்பினரின் பேங்க் அக்கவுண்டிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்,” என்று மண்டாவியா கூறினார்.

EPFO-விலிருந்து பணம் எடுப்பது எவ்வாறு செயல்படும்

  • பயனர்கள், தங்களின் இணைக்கப்பட்ட பேங்க் அக்கவுன்ட்ளுக்கு மாற்றுவதற்குத் தகுதியான EPF பேலன்ஸ் காண முடியும்.
  • தங்களது எந்க் அக்கவுன்ட்களுக்குப் பாதுகாப்பான பணப் ட்ரேன்ஸ்செக்ஷன் உறுதி செய்வதற்காக, ட்ரேன்ஸ் செக்ஷன் நிறைவு செய்ய அவர்கள் தங்களது இணைக்கப்பட்ட UPI பின்னைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
  • பேங்க் அக்கவுன்ட்களுக்குப் பணம் மாற்றப்பட்டவுடன், உறுப்பினர்கள் அதைத் தங்கள் விருப்பப்படி பயன்படுத்தலாம்; அதாவது, எலேக்ட்ரோனிக் முறையில் பணம் ட்ரேன்ஸ்பர் செய்வது அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி பேங்க் ஏடிஎம்களில் பணம் எடுப்பது போன்றவற்றைச் செய்யலாம்.
  • EPFO-வில் ஏழு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

UPI மூலம் பணம் எடுக்கும்போது பென்ஷனை பாதிக்குமா?

இதற்குக் காரணம், UPI அல்லது UPI-அடிப்படையிலான ஏடிஎம் (ATM) சேவை சந்தாதாரரின் வருங்கால வைப்பு நிதிக்கு (Provident Fund) மட்டுமே பொருந்தும் என்பதாகும். இதில் ஊழியர் மற்றும் வேலையளிப்பவர் ஆகிய இருவராலும் வருங்கால வைப்பு நிதிக்குச் செய்யப்படும் பங்களிப்புகளும் அடங்கும். ஓய்வூதியத்திற்காகச் செய்யப்படும் பங்களிப்புகள் இதனால் பாதிக்கப்படாது.

இதையும் படிங்க உங்கள் PAN கார்டை உங்களுக்கே தெரியாமல் ஒருவர் பயன்படுத்தினால் அதை எப்படி கண்டுபிடிப்பது?

EPFO 3.0 திட்டத்தை கொண்டு காரணம் என்ன?

EPFO உறுப்பினர்கள், உமாங் ஆப்யில் தங்களின் புதிய அல்லது ஏற்கனவே உள்ள யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை (UAN) செயல்படுத்த, முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப் (FAT) பயன்படுத்த முடியும்.

இது மெம்பர் தங்கள் பாஸ்புக்குகளை அணுக அனுமதிக்கும். – மெம்பர்கள் முழுமையற்ற தகவல்களைத் திருத்த முடியும். – மெம்பர்கள் ஆன்லைனிலும் ரெகுவஸ்ட் சமர்ப்பிக்க முடியும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Latest Article
சத்தமில்லாமல் Realme அதன் புதிய போனை அறிமுகம் செய்தது டாப் அம்சங்கள் பாருங்க சத்தமில்லாமல் Realme அதன் புதிய போனை அறிமுகம் செய்தது டாப் அம்சங்கள் பாருங்க
தூக்குங்கட அந்த தங்கத்தை Motorola யின் இந்த மாடலில் ரூ,9,000 வரை டிஸ்கவுண்ட் தூக்குங்கட அந்த தங்கத்தை Motorola யின் இந்த மாடலில் ரூ,9,000 வரை டிஸ்கவுண்ட்
கம்மி விலையில் Airtel 84 நாள் வேலிடிட்டி உடன் காலிங், டேட்டா மற்றும் OTT போன்ற பல நன்மை கம்மி விலையில் Airtel 84 நாள் வேலிடிட்டி உடன் காலிங், டேட்டா மற்றும் OTT போன்ற பல நன்மை
Dolby Atmos, 7.1.4CH சப்போர்ட் கொண்ட லேட்டஸ்ட் புதிய boAt Soundbar வேற லெவல் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் Dolby Atmos, 7.1.4CH சப்போர்ட் கொண்ட லேட்டஸ்ட் புதிய boAt Soundbar வேற லெவல் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்
BSNL யின் வேற லெவல் ஆபர் Jio-Airtelக்கு டஃப் கொடுக்கும் சூப்பர் திட்டம் வெறும் ரூ,51 யில் அன்லிமிடெட் காலிங்,டேட்டா பல நன்மை BSNL யின் வேற லெவல் ஆபர் Jio-Airtelக்கு டஃப் கொடுக்கும் சூப்பர் திட்டம் வெறும் ரூ,51 யில் அன்லிமிடெட் காலிங்,டேட்டா பல நன்மை
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Motorola Edge 70 Pro+
  • Xiaomi 17T
  • Oppo F33 Pro
  • Oppo Find X9 Ultra
  • Motorola Razr Fold
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Tamil Tech News
  • EPFO புதிய ரூல் இனி முகம் காட்டினால் தான் எல்லாம்
  • PAN card போலியாக பயன்படுத்துவரை கண்டுபிடிப்பது எப்படி
  • ஆசையை காட்டு மோசம் செய்த BSNL ஷாக்கில் மக்கள்
  • Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: எது பக்கா மாஸ் போன்
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo