Motorola Edge 70 Pro+ vs OnePlus Nord 6: ரூ,50,000 பட்ஜெட்டில் இந்த இரண்டு போன்களில் எது பெஸ்ட்?

Motorola சமிபத்தில் அதன் புதிய Motorola Edge 70 Pro+ போனை அறிமுகம் செய்தது, மேலும் இது மிட் ரேன்ஜ் செக்மண்டில் கொண்டுவரப்பட்டது இந்த போனின் பட்ஜெட் சுமார் ரூ,50,000 ரேஞ்சில் வருகிறது, இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் அதே விலை ரேஞ்சில் இருக்கும் OnePlus Nord 6 போனுடன் அதன் டிஸ்ப்ளே, கேமரா, ப்ரோசெசர் மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் மேலும் எது பவர்புல்லான போன் என்பதை பார்க்கலாம் வாங்க.

Motorola Edge 70 Pro+ vs OnePlus Nord 6 விலை

Motorola Edge 70 Pro+ போன் ஒரே ஒரு 12GB + 256GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ரூ,47,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது, அதுவே இதன் மறுபக்கம் OnePlus Nord 6 யின் ஆரம்ப 8GB + 256GB ரேம் ஸ்டோரேஜ் விலை ரூ, 42,999 அதுவே அதன் 12GB + 256GB ரேம் ஸ்டோரேஜ் விலை ரூ,47,999க்கு வைக்கப்பட்டுள்ளது

Motorola Edge 70 Pro+ vs OnePlus Nord 6: டிசைன்

Motorola Edge 70 Pro+யின் சிக்னேஜர் டிசைன் ஸ்லிம் மற்றும் லைட் வேய்ட் கொண்டுள்ளது மேலும் இந்த போனில் ஸ்கொயர் வடிவிலான கேமரா மாட்யூல் மற்றும் கர்வ்ட் எட்ஜ் கொண்டுள்ளது, மேலும் இது ஸ்கொயர் வடிவிலான கேமரா மாட்யூல் மற்றும் கர்வ்ட் எட்ஜ் மேலும் இந்த போன் IP68/69 ratings and MIL-STD-810H மிலிடரி கிரேட் உடன் அதிக நாள் நீடிதுளைக்கும் Edge 70 Pro+ போன் hicory Coffee, Zinfandel, and Stormy Sea. ஆகிய கலரில் வாங்கலாம்

மறுபுறம், OnePlus Nord 6 பிளாட் ஸ்க்ரீன் மற்றும் எட்ஜ் உடன் கூடிய எளிமையான டிசைனை கொண்டுள்ளது. இது மிகவும் உயர்தரமான தோற்றத்தையும் தனித்துவமான காட்சிப் பாணியையும் கொண்டுள்ளது; குறிப்பாக இதன் ‘ஹோலோகிராபிக் குவிக் சில்வர்’ (Holographic Quick Silver) வகை இதனைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இந்தத் தொலைபேசி ‘ஃப்ரெஷ் மின்ட்’ (Fresh Mint) மற்றும் ‘பிட்ச் பிளாக்’ (Pitch Black) ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கிறது. மேலும், Nord 6 ஆனது IP66, IP68, IP69 மற்றும் IP69K ஆகிய நான்கு IP தரச் சர்டிபிகேட் பெற்றுள்ளது.

Motorola Edge 70 Pro+ vs OnePlus Nord 6: டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே:-இப்பொழுது டிஸ்ப்ளே என வரும்போது Edge 70 Pro+ மற்றும் Edge 70 Pro மாடல்களில், 6.8-இன்ச் 1.5K எக்ஸ்ட்ரீம் AMOLED ஸ்க்ரீன் இடம்பெற்றுள்ளது. இந்த பேனல் 5,200 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது மற்றும் இது கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.

மறுபக்கம் Nord 6-யில் அதே அளவிலான 6.78-இன்ச் 1.5K AMOLED ஸ்க்ரீன் இடம்பெற்றுள்ளது; இது 165Hz ரெப்ரஸ் ரேட் (refresh rate) மற்றும் 3,600 நிட்ஸ் (nits) வரையிலான ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இதன் ஸ்க்ரீன் பாதுகாப்பிற்காக ‘Crystal Guard Glass’ பயன்படுத்தப்பட்டுள்ளது; கீழே விழும்போது ஏற்படும் பாதிப்பைத் தாங்கும் திறனில் இது ‘Gorilla Glass Victus+’-க்கு இணையானது என்று OnePlus நிறுவனம் கூறுகிறது.

Motorola Edge 70 Pro+ vs OnePlus Nord 6:ப்ரோசெசர்

Edge 70 Pro+ போனில் MediaTek Dimensity 8500 Extreme சிப்செட்டுடன் LPDDR5X RAM and UFS 4.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

அதுவே Nord 6 போனில் Snapdragon 8s Gen 4 சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் LPDDR5X RAM, and UFS 4.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது

Motorola Edge 70 Pro+ vs OnePlus Nord 6 ஒப்பரேட்டிங் சிஸ்டம்

இந்த இரண்டு போன்களையும் வேறுபடுத்துகிறது. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ போன், ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹலோ யுஐ (Hello UI) உடன் வருகிறது. ஹலோ யுஐ, தேவையற்ற மென்பொருட்கள் (bloatware) இல்லாமல், ஒரு நேர்த்தியான மற்றும் அசல் ஆண்ட்ராய்டு போன்ற மென்பொருள் அனுபவத்தை வழங்குகிறது. மேலும், இது எடிட்டிங், குறிப்புகள் எடுத்தல் மற்றும் பலவற்றிற்கான மோட்டோ ஏஐ (Moto AI) அம்சங்களின் தொகுப்புடனும் வருகிறது. சாப்ட்வேர் சப்போர்டில் மூன்று முக்கிய ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கான பாதுகாப்புப் பேட்ச்கள் அடங்கும்.

OnePlus Nord 6, ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்சிஜன்ஓஎஸ் 16-இல் இயங்குகிறது. ஆக்சிஜன்ஓஎஸ் 16, பல செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன், தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய பயனர் இடைமுகத்தை (UI) வழங்குகிறது. மேலும், ஒன்பிளஸ் நான்கு முக்கிய ஓஎஸ் மேம்படுத்தல்களையும், ஆறு வருட பாதுகாப்பு கனேக்ஷங்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது, இது நீண்ட கால பயன்பாட்டை உறுதி செய்கிறது. ஒட்டுமொத்த பயனர் இடைமுக அனுபவம் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது, ஆனால் நீங்கள் இந்த ஃபோனை நீண்ட காலம் பயன்படுத்த விரும்பினால், நோர்ட் 6 இந்த விஷயத்தில் ஒரு சிறிய அக்சஸ் வழங்குகிறது .

Motorola Edge 70 Pro+ vs OnePlus Nord 6: கேமரா

Motorola Edge 70 Pro Plus போனில் பின்புறத்தில் மூன்று கேமரா செட்டப் உடன் இதில் ப்ரைமரி கேமரா 50MP Sony LYTIA 710 சென்சார் வழங்கப்படுகிறது, இரண்டாவதாக 50MP 3.5x பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் மூன்றாவதாக 50MP அல்ட்ரா வைட்+ மேக்ரோ vision கேமரா super டிஜிட்டல் ஜூம் pro வழங்கப்படுகிறது மற்றும் செல்பிக்கு 50MP முன் கேமரா வழங்கப்படுகிறது மேலும் இது 4K 60FPS வீடியோ ரெக்கார்டிங் செய்யும்

அதுவே OnePlus Nord 6 போனில் இரட்டை கேமரா செட்டப் உடன் அதில் 50MP மெயின் கேமரா சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 32MP செல்பி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க Infinix Smart 20 vs Lava Bold N2 :ரூ,12,000 பட்ஜெட்டில் வரும் இந்த இரு போன்களில் எது பெஸ்ட்

Motorola Edge 70 Pro+ vs OnePlus Nord 6: பேட்டரி

பேட்டரி பவர் பொறுத்தவரை, OnePlus Nord 6 ஒரு தெளிவான முன்னிலை வகிக்கிறது. இது 9,000mAh பவர் கொண்ட ஒரு பெரிய பேட்டரியைக் கொண்டுள்ளது. மிதமான பயன்பாட்டில் 2.5 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் என்று கூறப்படுவதால், நீண்ட பேட்டரி ஆயுளுக்கு முன்னுரிமை அளிக்கும் பயனர்களுக்கு இது மிகவும் ஏற்றதாக அமைகிறது. இந்த போன் 80W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.
ஒப்பிடுகையில், எட்ஜ் 70 ப்ரோ+ (Edge 70 Pro+) சிறிய ஆனால் போதுமான 6,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 90W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது. இந்தத் பவர் ஒரு நாளுக்கும் மேலான பயன்பாட்டிற்குப் போதுமானதாக இருக்க வேண்டும், ஆனால் பேட்டரி ஆயுள் முக்கியம் என்றால், நோர்ட் 6 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :