கம்மி விலையில் Airtel 84 நாள் வேலிடிட்டி உடன் காலிங், டேட்டா மற்றும் OTT போன்ற பல நன்மை

HIGHLIGHTS

Airtel அதன் கஸ்டமர்களுக்கு அதிக நாள் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் OTT நன்மை வழங்குகிறது

இந்த திட்டத்தில் மிகவும் பிடித்தமான Netflix போன்ற நன்மை வழங்குகிறது

இந்த திட்டத்தின் நமை இதன் விலை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க

இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Airtel அதன் கஸ்டமர்களுக்கு அதிக நாள் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் பிரபலமான OTT திட்டங்களின் நமை வழங்குவதால் இது மிகவும் பாப்புலராக இருக்கிறது மேலும் இந்த திட்டத்தில் மிகவும் பிடித்தமான Netflix போன்ற நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டம் முழுசா 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நமை இதன் விலை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க

Airtel ரூ,1,729 திட்டம்.

ஏர்டெல்லின் ரூ. 1,729 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது . மேலும் இந்த திட்டத்தில் தினமும் ஒரு நாளைக்கு 2ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். அதாவது, முழு வேலிடிட்டி காலத்திலும் மொத்தம் 168ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். வீடியோ ஸ்ட்ரீமிங்,சோசியல் மீடியாக்கள் மற்றும் ஆன்லைன் வேலைகளுக்காக தினமும் அதிக டேட்டாவைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

airtel rs 1,729

டேட்டாவுடன் கூடுதலாக, இந்தத் திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்கை வழங்குகிறது. இதில் ரோமிங் காலிங்கும் அடங்கும், இது பயணம் செய்யும் போது ஏற்படும் கூடுதல் கவலைகளை நீக்குகிறது. பயனர்கள் தினமும் 100 SMS பெறுகிறார்கள், இவை வங்கிப் பரிவர்த்தனைகள், OTP மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

நெட்ஃபிலிக்ஸ் சமற்றும் பல இலவச OTT நன்மை.

இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் நெட்ஃபிளிக்ஸ் பேசிக் சப்ஸ்க்ரிப்ஷன் ஆகும். இது, கஸ்டமர்களுக்கு தனியாகச் சப்ஸ்க்ரிப்ஷன் வாங்காமலேயே நெட்ஃபிளிக்ஸின் அசல் வெப் சீரிஸ் , திரைப்படங்கள் மற்றும் பிற கன்டென்ட் பார்க்க அனுமதிக்கிறது. OTT சந்தா விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் இன்றைய உலகில், இந்த அம்சம் மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.

ஏர்டெல் இந்தத் திட்டத்தை ஒரே ஒரு OTT சேவைக்கு மட்டும் வரையறுக்கவில்லை. இது ஜியோஹாட்ஸ்டார் சூப்பர், ஜீ5 பிரீமியம் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் ஆகியவற்றுக்கான அணுகலையும் வழங்குகிறது. இதன் பொருள், பயனர்கள் ஒரே ஒரு ரீசார்ஜ் மூலம் பல தளங்களில் இருந்து பொழுதுபோக்கு கன்டென்ட் அணுகலாம்.

இதையும் படிங்க BSNL யின் வேற லெவல் ஆபர் Jio-Airtelக்கு டஃப் கொடுக்கும் சூப்பர் திட்டம் வெறும் ரூ,51 யில் அன்லிமிடெட் காலிங்,டேட்டா பல நன்மை

இந்தத் திட்டம் யாருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்?

நீங்கள் ஒவ்வொரு மாதமும் பல்வேறு OTT சந்தாக்கள் மற்றும் மொபைல் ரீசார்ஜ்களுக்காகச் செலவு செய்பவராக இருந்தால், இந்தத் திட்டம் உங்கள் ஒட்டுமொத்தச் செலவைக் குறைக்க உதவும். குறிப்பாக, தினமும் அதிக டேட்டாவைப் பயன்படுத்தி, வெப் சீரிஸ்கள் அல்லது லைவ் ஸ்போர்ட்ஸ் பார்க்க விரும்பும் பயனர்களுக்கு, இந்த பேக் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :