இனி ரயில் எப்பொழுது வரும் யாரையும் கேக்க தேவை இல்லை உங்களின் வாட்ஸ் அப் யில் ஸ்டேட்டஸ் செக் செய்யலாம்…!

இனி ரயில் எப்பொழுது வரும் யாரையும் கேக்க தேவை இல்லை உங்களின் வாட்ஸ் அப் யில்  ஸ்டேட்டஸ் செக்  செய்யலாம்…!
HIGHLIGHTS

இந்திய ரயில்வே துறை – மேக் மை டிரிப்புடன் இணைந்து கொண்டு வந்திருக்கும் இந்த வசதி பொதுமக்களுக்கு பதற்றம் இல்லாமல் பயணிக்க உதவும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது வாட்ஸ் அப் ஆப்யில்  நீங்கள் பயணிக்கும் அந்த ரயில் எப்பொழுது வரும் மணி கணக்காக காத்து காத்து கால்  வலிக்குதே எப்போத வரும்  ட்ரைன்  இனி நீங்கள் ரயில் எப்பொழுது வரும் என்றும் நீங்கள் உங்களின் வாட்ஸ்அப் யில் அதன் ஸ்டேட்டஸ் பார்க்கலாம் அது எப்படி பார்ப்பது வாருங்கள் பார்ப்போம்.

பயணிகள் முன்பு போல் 139-க்கு அழைக்கத் தேவையில்லை என்றும், நீங்கள் செல்லவிருக்கும் குறிப்பிட்ட ரயில் இப்போது எந்த ஸ்டேஷன் பக்கத்தில் வந்துக் கொண்டிருக்கிறது போன்ற தகவல்களை வாட்ஸ் அப்பிலேயே பெற்றிட முடியும் எனவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ஸ்மார்ட் போன் வந்ததிலிருந்து நாம் ஏதேனும் பொருட்களை வாங்குதல், இன்டர்நெட்டில் வீடியோ பார்ப்பது என பல வேலைகளை அதிலேயே செய்துவருகின்றோம். இதனுடன் வாட்ஸ் அப்  மூலம் நாம்  வீடியோ மற்றும் போட்டோ பார்ப்பது மற்றும் தகவலை ஒருவருக்கு ஒருவர் நாம்  மெசேஜ் பரிமாற்றம் செய்வது  ஸ்டேட்டஸ் என பல வேலைக்கு பயன்படுத்துகிறோம் அந்த வகையில் இன்று இந்த ரயில் வரும் ஸ்டேட்டஸ் எப்படி தெரிந்து கொள்வது என்பதை பற்றி பார்ப்போம்.

ஆன்லைனிலேயே எல்லா முக்கிய வேலையையும் அலையாமல் மொபைலிலேயே செய்து முடித்து வரும் நிலையில் நீங்கள் பயணிக்க இருக்கும் அல்லது ஒரு ரயில் எங்கு வந்துகொண்டிருக்கின்றது என்ற நேரடி நிலவரத்தையும் தற்போது மெசேஜ்களுக்கு  பதிலாக வாட்ஸ் அப்-லேயே பெறக்கூடிய புது வசதியை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. 

எப்படி ரயில் நேரடி நிலையை அறிவது :

ஸ்டேப் 1 முதலில் 7349389104 என்ற இந்த நம்பரை உங்கள் மொபைலில் சேவ் செய்ய வேண்டும் .

ஸ்டேப் 2 உங்கள் வாட்ஸ்-அப்-ஐ திறக்கவும்.

ஸ்டேப் 3 வாட்ஸ்-அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் நேரடி நிலை பெற விரும்பும் ரயிலின் நம்பரை அனுப்பவும்.

ஸ்டேப் 4  அடுத்த இரண்டு, மூன்று நொடிகளில் உங்கள் வாட்ஸ்-அப்பிற்கு நீங்கள் அறிய விரும்பிய ரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது. அடுத்து எந்த ரயில் நிலையத்திற்கு செல்ல உள்ளது. எத்தனை நிமிடங்களில் சென்றடையும் என்ற அனைத்து தகவல்கள் அடங்கிய ரயிலின் நேரடி நிலையை உங்கள் மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்திய ரயில்வே துறை – மேக் மை டிரிப்புடன் இணைந்து கொண்டு வந்திருக்கும் இந்த வசதி பொதுமக்களுக்கு பதற்றம் இல்லாமல் பயணிக்க உதவும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo