கூகிள் டாக்யூமென்ட் டெலிட் ஆகி விட்டதா, இதோ இப்படி ரிஸ்டோர் செய்யலாம்.

கூகிள் டாக்யூமென்ட் டெலிட் ஆகி விட்டதா, இதோ இப்படி  ரிஸ்டோர்  செய்யலாம்.
HIGHLIGHTS

கூகுள் நிறுவனம் பொறுத்தவரை பல்வேறு வசதிகளை கூகுள் டிரைவ்-ல் கொண்டுவந்துள்ளது

முக்கிய டாக்குமெண்ட்கள் மிக எளிதாக சேவ் செய்து வைக்கப்படுவதோடு பாதுகாப்பாகவும் இருக்கும்

கூகுள் டிரைவ் என்பது க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதாகும்.

கூகுள் நிறுவனம் பொறுத்தவரை பல்வேறு வசதிகளை கூகுள் டிரைவ்-ல் கொண்டுவந்துள்ளது, இவை அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது, தற்சமயம் OCR ர் (Optical Character Recognition) என்ற டெக்னாலஜி மூலம் நேரடியாக ஸ்கேன் செய்து நமது டிவைசில் பாதுகாத்து வைத்துகொள்ளும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. 

இந்தப் பயன்பாட்டின் மூலம் பயனர்கள் முக்கிய டாக்குமெண்ட்கள் மிக எளிதாக சேவ் செய்து வைக்கப்படுவதோடு பாதுகாப்பாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் டிரைவில் நாம் டெலிட் செய்த பழைய டாக்குமெண்ட்களை மிக எளிய முறையில் ரீஸ்டோர் செய்து பயன்படுத்த முடியும். 

முதலில் கூகுள் டிரைவ் என்பது க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதாகும். ஆனாலும், ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்து, செட்டிங்ஸ் சென்றால் , இன்டர்நெட் கனெக்சன் இல்லாமலேயே, உங்கள் டாகுமெண்ட்களைப் பார்க்கலாம் மற்றும் திருத்தலாம். மேலும் இவற்றில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. 

கூகுள் டிரைவில் சமீபத்தில் நீங்கள் டெலிட் செய்த டாக்குமென்ட்களை மிக எளிமையாக ரீஸ்டோர் செய்ய முடியும், இதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

ஸ்டேப் 1

முதலில் உங்கள் கூகுள் அக்கவுண்ட் வழியே சென்று கூகுள் டிரைவ் ஒப்சனை தேர்வுசெய்யவும். 

ஸ்டேப் 2 

அடுத்து கூகுள் டிரைவ்-யில் உள்ள trash-என்ற ஒப்சனை தேர்ந்தெடுக்கவும். 

ஸ்டேப் 3

அதன்பின்புtrash-என்ற பகுதியில் நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் டாக்குமெண்ட்ககளை  தேர்ந்தெடுக்க வலது கிளிக் செய்ய வேண்டும். 

ஸ்டேப் 4
பின்னர் ரீஸ்டோர் என்பதை கிளிக் செய்தால், நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் டாக்குமெண்ட்கள் கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo