பேஸ்புக்கில் உங்கள் தகவல் திருடப்பட்டுள்ளதா எப்படி தெரிந்து கொள்வது…!

HIGHLIGHTS

ஃபேஸ்புக் சோசியல் வெப்சைட்டில் கடுமையான பாதுகாப்பையும் மீறி மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக கடந்த மாதம் (செப்டம்பர்) அறிவிக்கப்பட்டது.

பேஸ்புக்கில் உங்கள் தகவல் திருடப்பட்டுள்ளதா  எப்படி தெரிந்து கொள்வது…!

ஃபேஸ்புக் சோசியல் வெப்சைட்டில்  கடுமையான பாதுகாப்பையும் மீறி மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக கடந்த மாதம் (செப்டம்பர்) அறிவிக்கப்பட்டது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அதில் யாருடைய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என உறுதி செய்ய முடியவில்லை. இது மோசமான நடவடிக்கை என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்து இருந்தது. சமீபத்தில் 3 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதை அந்நிறுவனம் உறுதி செய்தது. அவற்றில் 2 கோடியே 90 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்புகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் 1 கோடியே 15 லட்சம் பேரின் பெயர் மற்றும் தகவல் தொடர்களான டெலிபோன் நம்பர், இமெயில் முகவரிகள் திருடப்பட்டன. இவை தவிர 1 கோடியே 40 லட்சம் பேரின் பெயர், பாலினம், மொழி, உறவு முறை, மதம், சொந்த ஊர், தற்போது குடியிருக்கும் நகரம், பிறந்த தேதி, கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திருடப்பட்டு இருக்கின்றன.

இவ்வாறு உங்களது தகவலும் திருடப்பட்டு இருப்பின், அதை எவ்வாறு கண்டறிய ஃபேஸ்புக் உதவி பக்கத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். இந்த பக்கத்தின் கீழ் உங்களது அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று அறிந்து கொள்ள முடியும். உங்களது விவரங்கள் திருடப்பட்டது உண்மையெனில் அதை அறிந்து கொள்ளலாம். மேலும் திருடப்படவில்லை எனில், அந்த விவரமும் அறிந்து கொள்ளலாம்.

வல்லுநர்களின் படி தகவல் பறிகொடுத்த பயனர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஹேக்கர்கள் திருடியிருக்கும் தகவல் கொண்டு போலி அடையாளச் சான்றாக பயன்படுத்த முடியும் என்பதால், பயனரின் அக்கவுன்ட் விவரங்களை இயக்க முடியும்.

ஹேக்கர்கள் திருடிய தகவல்களின் விவரங்களை ஃபேஸ்புக் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு மெசேஜ் மூலம் தெரியப்படுத்தும். 

மேற்கண்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில், ஃபேஸ்புக் அக்சஸ் டொக்கன்களை ரீசெட் செய்து இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அமெரிக்க உளவுத்துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கிறோம் என ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo