Jio vs Airtel vs VI vs BSNL:3 மாதம் வேலிடிட்டி தரும் இந்த திட்டத்தில் எது குறைந்த விலையில் அதிக நன்மை தருகிறது?

நீங்கள் நீண்ட நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டத்தை பெற விரும்பினால், Jio, Airtel, VI மற்றும் BSNL ஒரு முறை ரீச்சார்ஜ் செய்து ஒரு 3 மாதங்களுக்கு நிம்மதியாக இருக்கலாம் இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் SMS போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இப்பொழுது இந்த நான்கு நிறுவனங்களையும் ஒப்பிட்டு இதில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றில் எது குறைந்த விலையில் மிக சிறந்த நன்மை வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க.

ஜியோவின் ரூ,889 திட்டம்:

ஜியோவின் ரூ,889 ப்ரீபெய்ட் திட்டதின் நன்மை என பார்த்தால், இதில் தினமும் 1.5GB டேட்டாவை வழங்குகிறது, இது மொத்தமாக 126GB ஆகும். 84 நாட்களுக்குச் வேலிடிட்டியுடன் இந்த திட்டத்தில் , அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்குகிறது. மற்ற நன்மைகளில், ஜியோ ஹாட்ஸ்டாருக்கான இலவச சப்ஸ்க்ரிப்ஷன், அத்துடன் ஜியோசாவன் ப்ரோ, ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுட் ஆகியவற்றிற்கான அக்சஸ் அடங்கும். அதிவேக டேட்டா லிமிட் முடிந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64kbps ஆகக் குறைக்கப்படும்.

ஏர்டெல்லின் ரூ,899 திட்டம்:

ஏர்டெல்லின்ரூ,899 ப்ரீபெய்ட் திட்டத்திலும் அதே , தினசரி 1.5GB டேட்டாவையும், 5G டிவைஸ்க்கு மற்றும் 5G கவரேஜ் உள்ள பகுதிகளில் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் வழங்குகிறது. இந்தத் திட்டம் 84 நாட்களுக்குச் வெளிடிட்டியாகும் . அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் மெசேஜ்கள் வழங்கப்படுகின்றன. மற்ற பலன்களில் 30 நாட்களுக்கு இலவச ஹலோடியூன்ஸ் அடங்கும். அதிவேக டேட்டா லிமிட் எட்டப்பட்ட பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64Kbps ஆகக் குறைக்கப்படும்.

வோடபோன் ஐடியாவின் ரூ,889 திட்டம்:

வோடஃபோன் ஐடியாவின் ரூ,889 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி காலம் 84 நாட்கள் ஆகும். இந்தத் திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS மெசேஜ்களும் கிடைக்கின்றன. இந்தத் திட்டத்தில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டாவைப் பயன்படுத்தலாம். வார இறுதி டேட்டா ரோல்ஓவர் திட்டத்தின் கீழ், திங்கள் முதல் வெள்ளி வரை மீதமுள்ள டேட்டாவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்தலாம். இது தவிர, ஒவ்வொரு மாதமும் 2GB டேட்டா பேக்கப் கூடுதல் கட்டணம் இல்லாமல் கிடைக்கிறது. 5G கவரேஜ் உள்ள பகுதிகளிலும் அன்லிமிடெட் 5G இன்டர்நெட் வசதியும் உள்ளது.

பிஎஸ்என்எல்-இன் ₹498 திட்டம்:

BSNL-யின் ரூ,498 திட்டம் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி காலம் 82 நாட்கள் ஆகும். இந்தத் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS மெசேஜ்களை வழங்குகிறது. அதிவேக டேட்டா லிமிட்டை அடைந்த பிறகு, அது 80 Kbps ஆகக் குறைந்துவிடும்.

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles