Motorola Edge 70 Pro plus vs Edge 70 Pro: அந்த ஒத்த எழுத்து மாறியதால பெருசா என்ன வித்தியாசம் இருக்கு பாருங்க

Motorola Edge 70 Pro plus vs Edge 70 Pro: அந்த ஒத்த எழுத்து மாறியதால பெருசா என்ன வித்தியாசம் இருக்கு பாருங்க

Motorola நேற்று அதன் புதிய ப்ரீமியம் மிட் ரேன்ஜ் பிரிவில் அதன் Motorola Edge 70 Pro+ போனை அறிமுகம் செய்தது, மேலும் இந்த போனுக்கு டஃப் கொடுக்கும் அதே போல பெயரில் இருக்கும் அந்த Motorola Edge 70 Pro போனுடன் இந்த போனை ஒப்பிட்டு இந்த இரு போனில் இருக்கும் வித்தியாசம் என பார்க்கலாம், மேலும் இந்த போன் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த இரு போனில் இருக்கும் டிஸ்ப்ளே, ப்ரோசெசர், கேமரா மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola Edge 70 Pro plus vs Edge 70 Pro: விலை தகவல்

Motorola Edge 70 Pro plus சந்தையில் சிங்கிள் வேரியன்ட் அறிமுகமானது இது 12 ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் வழங்குகிறது இதன் அறிமுக விலை ரூ,47,999 ஆகும் ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,44,999க்கு வாங்கலாம்

இதன் மறுபக்கம் Motorola Edge 70 Pro போனில் 12GB + 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,42,999க்கு வாங்கலாம்

Motorola Edge 70 Pro plus vs Edge 70 Pro: டிசைன் மற்றும் டிஸ்ப்ளே

டிசைன் :-Motorola யின் இந்த இந்த இரு போனின் டிசைன் கிட்டத்தட்ட ஒரே மாதுரியாக இருக்கிறது Edge 70 Pro+ மற்றும் Edge 70 Pro யின் இந்த இரு போனிலும் ஸ்கொயர் வடிவிலான பின்புற கேமரா மாட்யுல் இருக்கிறது மற்றும் இந்த இரு போனும் கர்வ்ட் எட்ஜ் மற்றும் வித்தியாசமான பென்டன் பினிஷ் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த இரு போனிலும் IP68/69 ரேட்டிங் மற்றும் MIL-STD-810H military-கிரேட் அம்சம் வழங்கப்படுகிறது.

இப்பொழுது கலர் வகையில் போஆர்க்கும்போது Edge 70 Pro+ மூன்று கலரில் வருகிறது அதில் Pantone finishes: Chicory Coffee, Zinfandel, மற்றும் Stormy Sea ஆகும், அதுவே Edge 70 Pro போனில் அதே மூன்று கலர் விருப்பங்களில் வருகிறது இது Pantone Lily White, Pantone Titan, மற்றும் Pantone Tea ஆகிய கலரில் வருகிறது.

டிஸ்ப்ளே:-இப்பொழுது டிஸ்ப்ளே என வரும்போது Edge 70 Pro+ மற்றும் Edge 70 Pro மாடல்களில், 6.8-இன்ச் 1.5K எக்ஸ்ட்ரீம் AMOLED ஸ்க்ரீன் இடம்பெற்றுள்ளது. இந்த பேனல் 5,200 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது , 144Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், HDR10+ மற்றும் கூடுதலாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது.

Motorola Edge 70 Pro+ vs Edge 70 Pro: கேமரா

Motorola Edge 70 Pro Plus போனில் பின்புறத்தில் மூன்று கேமரா செட்டப் உடன் இதில் ப்ரைமரி கேமரா 50MP Sony LYTIA 710 சென்சார் வழங்கப்படுகிறது, இரண்டாவதாக 50MP 3.5x பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் மூன்றாவதாக 50MP அல்ட்ரா வைட்+ மேக்ரோ vision கேமரா super டிஜிட்டல் ஜூம் pro வழங்கப்படுகிறது மற்றும் செல்பிக்கு 50MP முன் கேமரா வழங்கப்படுகிறது மேலும் இது 4K 60FPS வீடியோ ரெக்கார்டிங் செய்யும்

அதுவே இதன் மறுபக்கம் Edge 70 Pro போனில், 50MP மெயின் கேமரா மற்றும் 50MP அல்ட்ரா வைட் லென்ஸ் உடன் 3 இன் ஒன் லைட் சென்சார் வழங்கப்படுகிறது மேலும் இதில் 50MP செல்பி கேமரா முன்பக்கத்தில் வழங்கப்படுகிறது.

Motorola Edge 70 Pro+ vs Edge 70 Pro:ப்ரோசெசர்

இப்பொழுது ப்ரோசெசர் என வரும்போது இந்த இரு போனிலும் பெரியதாக Motorola Edge 70 Pro plus மற்றும் Edge 70 Pro இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான MediaTek Dimensity 8500 Extreme ப்ரோசெசர் வழங்கப்படுகிறது

Motorola Edge 70 Pro plus vs Edge 70 Pro:சாப்ட்வேர்

Edge 70 Pro+ மற்றும் Edge 70 Pro மாடல்களில், ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான Hello UI முன்பே நிறுவப்பட்டுள்ளது. இது தற்போது கிடைக்கும் சமீபத்திய ஆண்ட்ராய்டு பதிப்பாகும். இந்த இரண்டு போன்களுக்கும் மூன்று முக்கிய OS மேம்படுத்தல்களும், ஐந்து வருட பாதுகாப்பு இணைப்புகளும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், இந்த இரண்டு போன்களில் எதை வாங்கினாலும் நீங்கள் ஒரே மாதிரியான UI மற்றும் மென்பொருள் ஆதரவைப் பெறுவீர்கள் என்பதாகும். Hello UI, எடிட்டிங், குறிப்புகள் எடுத்தல் மற்றும் பலவற்றிற்கான AI அம்சங்களின் தொகுப்புடன், ஒரு நேர்த்தியான மற்றும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு போன்ற சாப்ட்வேர் அனுபவத்தை வழங்குவதில் பெயர் பெற்றது.

இதையும் படிங்க Lava Shark 2 5G vs Redmi A7 Pro: இந்தக் இரு போனில் எது பெஸ்ட் என்ன வித்தியாசம் பார்க்கலாம் வாங்க

Motorola Edge 70 Pro plus vs Edge 70 Pro: பேட்டரி

Motorola Edge 70 Pro+ போனில் , 6,500mAh பேட்டரி உடன் இந்த போனில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.

இதன் மறுபக்கம் Motorola Edge 70 Pro போனில் அதே 6,500mAh பேட்டரி மற்றும் 90W வயர்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது

Motorola Edge 70 Pro plus vs Edge 70 Pro இந்த இரு போனில் எது பெஸ்ட்?

இந்த இரு போனையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இதில் பெரியதாக ஒரு வித்தியாசமும் இல்லை இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான அம்சங்களே இருக்கிறது, இதில் வித்தியாசம் என பார்த்தல் Edge 70 pro plus யில் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது மற்றும் பேட்டரி ஒரே மாதுரியாக இருந்தாலும் Edge 70 Pro போனில் 15W வயர்லஸ் சார்ஜிங் வசதி வழங்கவில்லை மற்ற அம்சங்கள் போருத்தவரை ஒரே மாதுரியாக தான் இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile