CMF Phone 2 Pro vs iQOO Z10: இந்த இரண்டு மிட் ரேன்ஜ் போனில் எது பெஸ்ட் ?
CMF Phone 2 Pro நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்தது Dimensity 7300 Pro மற்றும் அப்க்ரேடிங் கேமரா செட்டப் உடன் வருகிறது இதனுடன் இதில் மூன்று கேமரா செட்டப் கொண்டுள்ளது மேலும் இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் iQOO Z10 போனில் 7,300mAh பேட்டரியுடன் இதில் Snapdragon 7s Gen 3 சிப்செட் இருக்கிறது மற்றும் இதன் விலை கிட்டத்தட்ட ரூ,25,000 பக்கத்தில் வருகிறது மேலும் இந்த இரு போனையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyCMF Phone 2 Pro vs iQOO Z10: விலை தகவல்
| ஸ்மார்ட்போன் | ஸ்டோரேஜ் | விலை |
| CMF Phone 2 Pro | 8GB+128GB | ரூ 18,999 |
| 8GB+256GB | ரூ,20,999 | |
| iQOO Z10 | 8GB+128GB | ரூ ,21,999 |
| 8GB+256GB | ரூ,23,999 | |
| 12GB+256GB | ரூ,25,999 |
CMF Phone 2 Pro மற்றும் iQOO Z10 யின் இந்த இரு வேரியன்டையும் ப்ளிப்கார்டில் 3,000ரூபாய்க்கு குறைவாக வாங்கலாம்.
CMF Phone 2 Pro vs iQOO Z10: டிசைன்
CMF Phone 2 Pro அதன் முன்னோடியைப் போலவே தோற்றமளிக்கிறது மற்றும் சந்தையில் உள்ள மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது ஒரு தனித்துவமான வடிவமைப்பைப் பராமரிக்கிறது. பின்புற பேனலை திருகுகளைப் பயன்படுத்தி மாற்றலாம், மேலும் இது போன் 1 இன் லேன்யார்டு மற்றும் பிற CMF ஆபரணங்களுடனும் இணக்கமாக உள்ளது. இந்த சாதனம் வெறும் 185 கிராம் எடையும், 7.8 mm திக்னஸ் கொண்டது, மேலும் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டண்டிர்க்காக IP64 ரேட்டிங் கொண்டுள்ளது .
iQOO Z10 அதன் டிசைன் முதன்மையான Vivo X200 தொடரிலிருந்து கடன் வாங்குகிறது, இதில் ஒரு பணிச்சூழலியல் பிடிக்காக வளைந்த எட்ஜ்களுடன் கூடிய பிளாஸ்டிக் பின்புற பேனல் உள்ளது. இது பனிப்பாறை வெள்ளி மற்றும் ஸ்டெல்லர் கருப்பு கலர்களில் கிடைக்கிறது. இந்த சாதனம் 199 கிராம் எடையும் 7.89 mm திக்னஸ் கொண்டது. இது IP65 மதிப்பீடு மற்றும் MIL-STD-810H இராணுவ தர நீடித்துழைப்பு சான்றிதழையும் கொண்டுள்ளது.
CMF Phone 2 Pro vs iQOO Z10: டிஸ்ப்ளே
இந்த போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.77″ FHD+ flexible AMOLED டிஸ்ப்ளே உடன் HDR சப்போர்ட்டுடன் 1080 x 2392 பிக்சல் ரெசளுசனுடன் மற்றும் 120 Hz ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது மேலும் இதில் 3000 nits ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது.
iQOO Z10 யில் 6.77-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் முழு HD+ 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இதில் 5000 நிட்ஸ் வரை ப்ரைட்னஸ் வழங்குகிறது.

CMF Phone 2 Pro vs iQOO Z10:கேமரா
இப்பொழுது கேமரா அம்சங்கள் பற்றி பேசுகையில் இதில் 50 MP மெயின் கேமரா f/1.88 அப்ரட்ஜர், டெலிபோட்டோ இதில் 50MP செகண்டரி கேமரா உடன் இது f/1.85 அப்ராஜர் கொண்டுள்ளது மற்றும் இதில் மூன்றாவதாக 8 MP அல்ட்ரா வைட் கேமரா உடன் f/2.2 அப்ரட்ஜர் கொண்டுள்ளது மற்றும் இதில் செல்பிக்கு 16 MP முன் பக்கத்தில் இருக்கிறது இதனுடன் இதில் f/2.45 அப்ரட்ஜர் கொண்டுள்ளது . மேலும் இதில் 4K ரெகார்டிங் 30 FPS எடுக்க முடியும் EIS இமேஜ் ஸ்டேப்ளைசெசன் எடுக்க முடியும்.
அதுவே iQOO Z10 யில் டுயல் கேமராவுடன் இதில் 50MP f/1.79 அப்ரட்ஜர் ப்ரைமரி கேமரா உடன் 2MP டெப்த் சென்சார் மற்றும் இதில் முன் பக்கத்தில் செல்பிக்கு 32MP f/2.0 அப்ரட்ஜர் கொண்ட கேமரா இருக்கிறது.
CMF Phone 2 Pro vs iQOO Z10: ப்ரோசெசர்
இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 7300 Pro 5G 8-core up to 2.5 GHz கிளாக் ஸ்பீடில் இயங்குகிறது மேலும் இது Nothing OS 3.2 (பவரின் கீழ் Android 15) அடிபடையில் இயங்குகிறது மேலும் இதில் 3 ஆண்டு ஆண்ட்ரோய்ட் அப்டேட் மற்றும் 6 ஆண்டு செக்யூரிட்டி பெட்சஸ் ஆகியவை வழங்குகிறது.
அதுவே இதன் மறுபக்கம் iQOO Z10 யில் Qualcomm Snapdragon 7s Gen 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இது Funtouch OS 15 அடிபடையின் கீழ் Android 15 யில் இயங்குகிறது மற்றும் இது UI உடன் இதில் அட்வான்ஸ்ட் AI பன்சன் I Note Assist, AI Erase, AI Photo Enhance மற்றும் சர்கிள் டு சர்ச் போன்ற பல அம்சம் கொண்டுள்ளது இதனுடன் இதில் இரண்டு ஆண்ட்ரோய்ட் அப்டேட் மற்றும் மூன்று ஆண்டு செக்யுரிட்டி பேட்ச் ஆகியவை வழங்குகிறது.

CMF Phone 2 Pro vs iQOO Z10: பேட்டரி
CMF Phone 2 Pro பேட்டரியை பற்றி பேசுகையில் 5000 mAh பேட்டரியுடன் 33W பாஸ்ட் சார்ஜிங் 5W ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
அதுவே இதன் மறுபக்கம் iQOO Z10 யில் 7,300mAh பேட்டரியுடன் 90W வயர்ட் சார்ஜிங் பாஸ்ட் சார்ஜிங் வழங்குகிறது.
CMF Phone 2 Pro vs iQOO Z10: எது பெஸ்ட்?
CMF Phone 2 Pro, CMF Phone 1 இன் சிறந்த வாரிசு ஆகும், மேலும் கேமராக்களில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், சிறிது செயல்திறன் ஊக்கத்தையும் தருகிறது. இந்த சாதனம் ஒரு நல்ல அளவிலான பேட்டரியையும் கொண்டுள்ளது, மேலும் Nothing OS 3.2 அதன் எளிமைக்காக பலரால் பாராட்டப்படுகிறது.
இப்பொழுது அதன் மறுபக்கம் iQOO Z10 சில முக்கிய முன்னேற்றங்களைக் கொண்டுள்ளது, அவை CMF-ஐ அதன் பணத்திற்கு ஏற்றவாறு மாற்றுகின்றன. பிரீமியம் கர்வ்ட் டிஸ்ப்ளே , மிகப்பெரிய 7300mAh பேட்டரி மற்றும் சிறந்த கேமிங் பர்போமான்ஸ் நீங்கள் கேமிங்க்க்கு முக்கியத்துவம் கொடுத்தால் iQOO Z10 பெஸ்ட்டாக இருக்கும்
இதையும் படிங்க Nothing புதிய CMF Phone 2 Pro அறிமுகம் இதன் டாப் அம்சம் மற்றும் விலை தகவல் பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile