WhatsApp வொயிஸ் மெசேஜை கேட்க்க தொல்லையா இருக்கா எளிதா ட்ரேன்ஸ்ரிப்ட் மாத்துங்க
உங்களுக்கு WhatsApp யில் வரும் வொயிஸ் மெசேஜை கேட்பதற்க்கு பிடிக்கவில்லை என்றால், இனி நீங்கள் உங்களின் வொயிஸ் மெசேஜை ட்ரேன்ஸ்க்ரிப்ட் அம்சத்தின் மூலம் நீங்கள் படித்து கொள்ள முடியும், நீங்கள் சத்தம் நிறைந்த சூழலில் இருக்கும்போது அல்லது ஆடியோ உடனடியாக கிடைக்காத இடத்தில் இருக்கும்போது இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முழு டிரான்ஸ்கிரிப்ஷன் செயல்முறையும் பயனரின் போனில் நேரடியாக நடக்கும் மேலும் இந்த வொயிஸ் ட்ரேன்ஸ்ரிப்ட் அம்சத்தை பற்றி முழுசா தெருஞ்சிக்கலாம் வாங்க.
SurveyWhatsApp யில் வொயிஸ் மெசேஜை ட்ரேன்ஸ்ரிப்ட் அம்சத்தை எப்படி ஆன் செய்வது?
- முதலில், வாட்ஸ்அப்பின் மேல் வலதுபுறத்தில் உள்ள செட்டிங்களுக்குச் செல்லவும்.
- செட்டிங்க்களில் சேட்கள் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதற்குப் பிறகு, வொயிஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்டுகளின் விருப்பத்தைத் தட்டவும்.
- இங்கே நீங்கள் இந்த அம்சத்தை இயக்கலாம் அல்லது முடக்கலாம்.
- உங்கள் குரல் செய்திகள் பெரும்பாலானவை வரும் டிரான்ஸ்கிரிப்ஷன் மொழியையும் இங்கே நீங்கள் தேர்வு செய்யலாம்.
- Settings > Chats > Transcript language என்பதற்குச் சென்று நீங்கள் பின்னர் மொழியை மாற்றலாம்.
- இந்த அம்சத்தை முடக்குவது உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியை ரீஸ்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்த திட்டத்தின் வேலிடிட்டியை குறைத்து ஷாக் கொடுத்த BSNL ரூ,99 யில் இனி அது இருக்காது
WhatsApp வொயிஸ் மெசேஜை டெக்ஸ்ட்டில் எப்படி மாற்றுவது?
- முதலில், செட்டிங்களுக்குச் சென்று டிரான்ஸ்கிரிப்ட் அம்சத்தை இயக்கவும்.
- சேட்டில் உள்ள எந்த வொயிஸ் மெசேஜையும் தட்டிப் பிடிக்கவும்.
- ஸ்க்ரீனில் தோன்றும் டிரான்ஸ்க்ரைப் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதற்குப் பிறகு, அதே மெசெஜின் கீழே வொயிஸ் மெசெஜின் டெக்ஸ்ட்டை காண்பீர்கள்.
- டிரான்ஸ்கிரிப்ட் நீளமாக இருந்தால், மெசெஜின் உள்ளே உள்ள மெனு ஐகானைப் பயன்படுத்தி அதை விரிவாக்கலாம் அல்லது சுருக்கலாம்.
- வொயிஸ் டெக்ஸ்ட்டாக மாற்ற சிறிது நேரம் ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile