விவசாயத்தை பற்றி அனைத்து தகவலுக்கு ஒரே ஆப்யில் பெற ANNAM.AI இது எப்படி மக்களுக்கு பயன்படுகிறது

விவசாயிகளுக்கான பல வகையான ஆப் இருக்கிறது அதில் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமாக இருக்கிறது அதில் வானிலை பற்றி தெரிந்து கொள்ள ஒரு ஆப், விவசாயத்தை பற்றி மிக சிறந்த அட்வைஸ் பெற என ஒவ்வின்றுக்கும் தனி தனி ஆப் டவுன்ட்லிட் செய்ய வேண்டி இருக்குக்கிறது. மேலும் மாறி வரும் வானிலை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு ஆப பார்க்குவது என்பது கடினமாகும்

IIT Ropar உடன் சேர்ந்து ANNAM.A என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஒரு ஆப் கொண்டு வந்துள்ளது இதன் மூலம் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் டெக்நோலாஜி பயன்படுத்தி அணைத்து தகவலையும் பெற முடியும் இதில் (NABARD, ICRISAT, MSSRF) போன்ற பயனை பெறலாம். இதன் மூலம் விவசாயம் கணிப்பாக இல்லாமல், முழுக்க முழுக்க டேட்டாவின் அடிபடையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பற்றி முழு தகவல் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ANNAM.AI என்றால் என்ன?

டாக்டர் புஷ்பேந்திர சிங், அன்னம்.ஏஐ (ANNAM.AI) என்பது IIT ரோபரில் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் மையம் என்று விளக்கினார். நாட்டின் விவசாயத்தில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒரு “திறன்மிகு விவசாய முறையை” உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இது விவசாயத்தை மேலும் அறிவியல் பூர்வமானதாகவும், பாதுகாப்பானதாகவும், லாபகரமானதாகவும் மாற்றுவதற்காக ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் , டேட்டாக்கள் மற்றும் விவசாய நிபுணர்களின் ஆலோசனைகளைப் பயன்படுத்துகிறது.

Annam AI

ANNAM.AI மூன்று பகுதிகளைக் கொண்டது

  • SWAN வானிலை நிலையம்: இது விவசாயிகளுக்காக இன்ஸ்டால் செய்யப்பட திறன்மிகு வானிலை நிலையங்கள் மூலம், வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் வானிலை குறித்த மிகவும் துல்லியமான டேட்டாக்கள் பண்ணை மட்டத்திலேயே நேரடியாகச் சேகரிக்கிறது.
  • கிருஷி ஏஐ: சேகரிக்கப்பட்ட டேட்டாகளைப் சேர் செய்து செய்து, பயிர் ஆரோக்கியம், வானிலை மாற்றங்கள், பூச்சித் தாக்குதல்கள் மற்றும் பிற விவசாய அபாயங்களைத் துல்லியமாகக் கணிக்கிறது.
  • ACE சாட்பாட்: இது விவசாயிகளுக்கு அவர்களின் உள்ளூர் மொழியில் கஸ்டமைஸ் செய்வதனுடன் விவசாய ஆலோசனைகளை வழங்கும் ஒரு ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் சாட்பாட் ஆகும்.

விவசாயிகளுக்கு இது ஏன் முக்கியமானது?

  • மாறிவரும் வானிலை மற்றும் நிச்சயமற்ற மழைப்பொழிவு குறித்து இந்த அமைப்பு விவசாயிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதன் மூலம், இழப்புகளைக் குறைக்கிறது என்று டாக்டர் புஷ்பேந்திர சிங் கூறினார்.
  • எப்போது நீர்ப்பாசனம் செய்ய வேண்டும், எப்போது உரம் இட வேண்டும் மற்றும் பூச்சிகளிடமிருந்து பயிரை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த தகவல்களை விவசாயிகள் பெறலாம்.
  • இது அரசாங்கத்திற்குத் துல்லியமான டேட்டாகளை வழங்குவதால், வேளாண் கொள்கைகளை வகுப்பதும், சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பதும் எளிதாகிறது.

கிருஷி ஏஐ ஒரு சிறப்புப் பங்கைக் கொண்டுள்ளது

ANNAM.AI-யின் கிருஷி AI-யின் செயல்படும் முறை முற்றிலும் மாறுபட்டது. தற்போதுள்ள வேளாண் ஆப்களுடன் ஒப்பிடுகையில், கிருஷி AI பல்வேறு மூலங்களிலிருந்து டேட்டாகளைச் சேகரித்து, சென்சார் ஃபியூஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயிகளுக்குத் துல்லியமான ஆலோசனைகளை வழங்குகிறது. இது 1 முதல் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வெப்பநிலை, காற்று, ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு குறித்த துல்லியமான தகவல்களை வழங்குகிறது. 5 மில்லியனுக்கும் அதிகமான படங்களின் அடிப்படையில், பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளையும் நோய்களையும் இந்த AI உடனடியாக அடையாளம் காணும். சேட்லைட் போட்டோட்டகள் மற்றும் பண்ணையில் வானிலை நிலையங்களின் டேட்டாகளை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

இண்டநெட் இல்லாமல் இது செயல்படுமா?

வயல்வெளிகளில் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஸ்வான் வானிலை நிலையங்களில் ஒரு திறன்மிகு ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் சிப் பொருத்தப்பட்டுள்ளது. கிராமத்திலோ அல்லது வயல்களில் இன்டர்நெட் வசதி இல்லாவிட்டாலும், இது டிவைஸில் லோக்கல் வானிலையைத் துல்லியமாகக் கணிக்க முடியும்.

அன்னம் AI எந்த எந்த மொழிகளில் சப்போர்ட் செய்யும்?

ACE சாட்பாட், அதாவது அன்னம் சாட் என்ஜின், இந்தி, பஞ்சாபி, மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் செயல்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது சொந்த மொழியில் இந்த ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் உடன் பேச முடியும்.

அன்னம் AI விவசாயிகளுக்கு எப்படி உதவுகிறது

ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் இன்றைய வானிலையைக் கணிப்பது மட்டுமல்லாமல், இது மெஷின் லேர்னிங் உதவியுடன், கடும் வெப்பம் அல்லது பூச்சித் தாக்குதல்கள் குறித்து மூன்று முதல் ஏழு நாட்களுக்கு முன்பே விவசாயிகளை எச்சரிக்கவும் செய்கிறது. இது, விவசாயிகள் தங்கள் பயிர்களைச் சேதத்திலிருந்து பாதுகாக்கவும், உரம் மற்றும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் உதவுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :