Vivo T5
Vivo இந்தியாவில் அதன் புதிய போனை அறிமுகம் செய்வதற்க்கான தேதியை அறிவித்துள்ளது . இந்த புதிய போனின் பெயர் Vivo T5 5G ஆகும். இந்த போன செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதை தவிர ஏற்கனவே Vivo T5 சீரிஸில் Vivo T5 Lite 5G, T5x 5G, மற்றும் T5 Pro 5G போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பொழுது அதன் முக்கிய போனை அறிமுகம் செய்ய இருக்கிறது மேலும் இந்த போனின் அறிமுக தகவலை பற்றி விவோவோவின் அதிகாரபூர்வ ட்விட்டர் X பக்கத்தில் டீசர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
Vivo T5 5G இந்தியாவில் செப்டம்பர் 2 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு அறிமுகமாகும். இது ராயல் பிரான்ஸ் மற்றும் சில்வர் கிரீன் ஆகிய இரண்டு கலர்களில் வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் இந்த போன்கள் அறிமுகத்திற்காக ஃபிளிப்கார்ட்டில் ஒரு பிரத்யேக மைக்ரோசைட் உள்ளது இதை தவிர அதன் அதிகாரபூர்வ X பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது . இது, விவோ இந்தியா ஆன்லைன் ஸ்டோருடன் சேர்த்து, இந்த போனை வாங்குவதற்கான பிற வழிகளில் ஒன்றாக இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.
The all-new vivo T5 coming in on 2nd Sept with Lightning fast speed.
— vivo India (@Vivo_India) August 25, 2026
Launching on 2nd Sept.
Link in bio#vivoT5 #vivoSeriesT #GetSetTurbo pic.twitter.com/gKJYL6DMGR
தங்களின் வரவிருக்கும் T-சீரிஸ் கைபேசியில், சமீபத்தில் விவோ S2-வில் காணப்பட்ட ஸ்கைலைன் டிசைன் இடம்பெறும் என்று அந்த பிராண்ட் கூறுகிறது. டீசர் படத்தில், பின்புற பேனலின் மேல் பாதியில் ஒரு கிடைமட்ட கேமரா பார் இருப்பதும், அதில் இரண்டு கேமரா லென்ஸ்கள் மற்றும் ஒரு LED ஒளி வளையம் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த விவோ போன் ஒரு வளைவான வடிவமைப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. விவோ T5 5G, ஆரிஜின்ஓஎஸ்-யில் இயங்கும் என்றும், ஆரிஜின்ஓஎஸ் 6 என்பது அந்த பிராண்ட் வழங்கும் சமீபத்திய ஓஎஸ் பதிப்பு என்றும் டீசர் வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க பொளந்து கட்டுது ஆபர் 7000mAh பேட்டரி MOTOROLA யின் இந்த மாடலில் ஒரிஜினல் விலையை விட ரூ,20,550 டிஸ்கவுண்ட்
இதனுடன் இந்த போனில் இது 1.5K 144Hz 3D கர்வ்ட் AMOLED ஸ்க்ரீனுடன் கொண்டிருக்கும். மேலும் ஸ்க்ரீனின் மேற்புறத்தில் செல்ஃபி கேமராவிற்காக ஒரு துளையை மையமாகக் கொண்ட ஹோல்-பஞ்ச் கட்அவுட் உள்ளது. வரவிருக்கும் இந்த போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 7500 டர்போ செயலி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ரேம் மற்றும் ஸ்டோரேஜ் பற்றி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
இந்தக் கைப்பேசியில் 7,050mAh பேட்டரி இடம்பெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதத் தொடக்கத்தில் நடைபெற உள்ள இதன் வெளியீட்டிற்கு நெருங்கிய நேரத்தில், இது குறித்த கூடுதல் விவரங்களை நாம் எதிர்பார்க்கலாம்.